பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நினைவுக் குமிழிகள் இப்பாடலை முதல் இரண்டடிகளில் உள்ள எடுத்துக் காட்டை நன்கு விளக்கி உலகத்தாருக்கு உற்றார் யாவர் என்ற ஈற்றடிக் கருத்தை தெளிவாக விளக்கினது இன்றும் நினைத்து அசைபோட முடிகின்றது. நெஞ்சைக் கவர்ந்த மற்றொரு பாடல் : சேவித்தும், சென்று இரந்தும், தெண் நீர்க் கடல் கடந்தும், பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். ' இந்தப் பாடலில் ஒர் உண்மை உள்ளது என்றாலும் அந்த உண்மை இன்றைய நாகரிக உலகில் எல்லார்க்கும் பொருந்துவதில்லை. .ெ ம ய் வ ரு த் தி க் கூலிபெறும் உழைப்பாளிகட்குப் பெரும்பாலும் பொருந்தும், நாகரிக மக்கள், வணிகர்கள், ஆலை முதலாளிகள், அமைச்சர்கள், கள்ள வாணிகத்தில் ஈடுபடுபவர்கள், கடத்தல் மன்னர்கள் போன்ற இவர்கட்குச் சிறிதும் பொருந்தாது. வயிற்றுப்பசி தீர்ந்ததும் இவர்கள் அத்தியாயம் முடிந்து போவதில்லை. வானுற ஓங்கி வளர்த்துக் கொண்ட ஆசையால் சாதாரண மக்களின் நினைப்புக்கும் எட்டாத எண்ணற்ற செயல்களின் மூலம் பொருள் திரட்டுகின்றனர். இவர்கள் எல்லோரையும் விட அரசிரல்வாதிகளின் திருவிளையாடல்கள் சொல்லி முடியா. மேற்குறிப்பிட்ட பாடலை ஒருபுடையொத்த கவிமணி தேசியவிநாயகம்பிள்ளையவர்களின்;அடியிற்:கண்ட பாடலின் பொருளும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட் பட்டது. 11. நல்வழி - 19