பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலூர் வாத்தியார் கற்பித்த முறை 9i பெரகம்பியிலும் கோட்டாத்துரிலும் விநாயக சதுர்த்தி விழாவன்று இதனை முதலில் பாடி விநாயகர் வழிபாடு தொடங்கும். ஆனால் அந்த வயதில் எனக்குக் கற்பித்த எந்த ஆகிரியரும் சங்கத் தமிழ் இன்னது என்பதை விளக்க வில்லை. ஒருகால் விளக்கி இருந்தாலும் எனக்கு அப்போது புரியுமா? என்பது ஐயமே. இப்போது சிந்தித்துப் பார்த் தால் எனக்குக் கற்பித்த ஆசிரியர்களிடம் இதனை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு நல்ல தமிழறிவு இல்லை என்பது தெளிவாகின்றது. பிள்ளையார் சதுர்த்தி'யன்று இப்பாடலைச் சொல்லி முடிந்த பிறகு விநாயகர் அகவல்’ சேர்ந்து பாடப்பெறும். இதில் உள்ள பல பாடல்கள் வயது வந்தவர்கட்குத்தான் விளக்கம் எய்தும். சிறுவர்க்கும் விளக்கம் எய்தும் ஒரு பாடல் , சாதி இரண்டுஒழிய வேறுஇல்லை, சாற்றுங்கால்; நீதி வழுவா நெறிமுறையின், மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்; பட்டாங்கில் உள்ள படி.." இறுதி இரண்டடிகளில் நுவலப் பெறும் கருத்தின் அடிப்படை யில் இரண்டே சாதி உண்டு என்பதை ஆசிரியரும் தெளிவாக விளக்கினார்; நானும் தெளிவாக அறிந்து கொண்டேன். வேலூர் வாத்தியார் சொல்லும்போது அப்போதே என் மனத்தைக் கவர்ந்த இன்னொரு பாடல் : மரம்பழுத்தால் வெளவாலை வா’ என்று கூவி இரந்துஅழைப்பார் யாவரும் அங்குஇல்லை;சுரந்துஅமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார், உலகத் தவர்.'" 9 நல்வழி - 2 10 டிெ - 29