பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நினைவுக் குமிழிகள்-1 நாட்டுப் புறத்தில் பயிலும் சிறுவர்கட்கு, இக்காட்சி தெளிவு. முதலிரண்டு அடிகளில் உள்ள இக்காட்சியின் ஒளியால் இறுதி இரண்டு அடிகளில் உள்ள உண்மை மனத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. இன்னொரு பாடல் : நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துஉறையும்; அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு; - நெஞ்சில் கரவுஉடையார் தம்மைக் கரப்பர், கரவார் கரவுஇலா நெஞ்சத் தவர்." இப்பாடலிலும் முதலிரண்டு அடிகளில் உள்ள காட்சி நாட்டுப்புற மாணாக்கர்கட்குத் தெளிவு. இறுதி இரண்டு அடிகளில் பொதிந்துள்ள உண்மை மனப் பக்குவத்திற்கேற்பப் புலனாகும். முதலிரண்டு அடிகளிலுள்ள காட்சியின் ஒளி இக் கருத்தினை மேலும் தெளிவாக்கும். வாக்குண்டாம்: என்ற சிறிய நீதி நூலில் உள்ள உண்மைகள் இப்போது, நன்கு மன முதிர்ச்சியடைந்தபோது நன்றாகத் தெளிவாகின் றன. சிறுவர்கட்கு இவற்றைக் கதைகள் மூலமும் கற்பிக் கலாம். ஒளவைப் பாட்டி அருளிய மற்றொரு நூல் கல்வழி என்பது. ஒளவையார் என்ற சினிமாவில் ஒளவைப் பாட்டி யாக நடிக்கும் இசையரசி கொடுமுடி சுந்தராம்பாள் பாடி இலட்சக் கணக்கான தமிழர்களின் மனத்தைக் கவர்ந்த பாடல் இது : பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்; - கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் துாமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா." 7 வாக்.- 25 8 நல்வழி - காப்பு