பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலூர் வாத்தியார் கற்பித்த முறை 89. என்ற அளவில் கற்பித்தார். ஒரு குழந்தை நகர்தல், எழுந்து நிற்றல், தத்தித்தத்தி நடக்க முயலுதல் என்ற அளவில் முயலுதல்போல் என் ஆங்கில அறிவும் மெதுவாக வளர்ந்தது. ஆனால் இவர் மாற்றப் பெற்றதால் நானும் உள்ளூரில் சாமுவேல் பிள்ளை தனியாக நடத்தி வந்த பள்ளி யில் சேர்ந்துகொண்டேன், கற்பித்த முறை : வேலூர் வாத்தியார் வாக்குண்டாம், நல்வழியை நன்கு கற்பித்தார். ஏற்கெனவே இவற்றை ஓரளவு பெரகம்பியில் கற்று வந்திருந்தமையால், இங்கு நன்கு கற்க முடிந்தது. பல பாடல்களை நெட்டுருப் போட்டு ஒப்பிக்கச் செய்து விடுவார். சில பாடல்கட்குப் பொருள் தெளிவாக விளங்குவதில்லை. காரணம்,எங்கள் மனவளர்ச்சி அந்த அளவு ஏற்படவில்லை. அப்போது கற்று பசுமரத் தாணி போல் மனத்தில் பதிந்த சில பாடல்களை இன்றும் நினைந்து அசை போட முடிகின்றது. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே; அல்லாத ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்திற்கு நேர். " இந்த ஒளவைப் பாட்டியின் பாடலின் உண்மையை நாம் அன்றாட வாழ்க்கையில் காணமுடிகின்றது. சிறுவயதில் தெளிவாக மனத்தில் பதியும் இன்னொரு பாடல். நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்; - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும், மழை." 5 வாக் - 2 6 டிெ 10