பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நினைவுக் குமிழிகள்-1 பல பிரச்சினைகளை விளைவிக்கும். வீட்டிலும் பள்ளியிலும் அரசியலிலும் தோன்றும் பல பிரச்சினைகட்கு உள்ளேயே அடக்கி வைத்திருக்கும் கோளாறுகளே காரணம் என்பது உளவியல் காட்டும் உண்மை. மேற் பரப்பில் தோன்றாமல் உள்ளேயே உறைந்து கிடக்கும் குருதி கட்டிப் புரையோடிப் பலகோளாறுகளை விளைவித்தல் இவ்விடத்தில் கருதற் பாலது. ஆற்றுநீரினை அணை போட்டுத் தேக்கினாலும் வடி கால்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததன்றோ? அடிக்கடி இருவரிடையேயும் வாக்கு வாதம் முற்றி மோதல் கள் வரும் அளவுக்கு விளைவுகள் ஏற்பட்டமைக்கு இந்தச் சிக்கல்களே காரணமாகும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றது. குமிழி-11 11. வேலூர் வாத்தியார் கற்பித்த முறை கோட்டாத்தூரில் தொடக்க நிலைப் பள்ளியில் கற்பித்தவர் மூவர், முதலாமவர் வேலூர் வாத்தியார், சந்திரசேகரய்யர் இவர் பெயர் என்பது நினைவு. இரண்டா மவர் கப்பராய உடையார்; மூன்றாமவர் வி. கே. அரங்கநாத அய்யர். வேலூர் வாத்தியார் Lower grade ஆசிரியர்; பழைய மரபையொட்டிக் கற்பிப்பவர். ஓரளவு தமிழ் இலக்கிய மரபை அறிந்து கற்பிப்பவர். சுப்பராய உடையார் பள்ளியில் என்ன கற்பித்தார் என்பது நினைவு இல்லை; எதையும் தெளிவாகக் கற்பிக்கவில்லை, கற்பித்த முறையும் என் மனத்தைக் கவரவில்லை. ஏதோ காலத்தைத் தள்ளிக் கொண்டு போனார்; ஆனால் மாலையில் (இரவில்) தனி யாகக் கற்பித்தது நினைவில் உள்ளது. ஆங்கிலம் கற்பித்த தில் இவர்தாம் முதலில் எனக்குப் பிள்ளையார் சுழி போட்டார், எழுத்துகள், சொற்கள், சொற்றொடர்கள்