பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைப் பள்ளியில் 87 இப்போது சுப்பிராய உடையாருக்குக் கிடைத்தது. இதைத் தவிர ஆங்கிலம் சொல்லிக் கொடுத்ததால் மாதம் சுமார் இருபது ரூபாய் கிடைக்கும். வைத்தியத்தில் சிறிது வருமான மும் இருந்தது. இதனால் இருவரிடையேயும் போட்டியும் பொறாமை யும் அதிகரித்து வரலாயின. வேலூர் வாத்தியாருக்கும் குறைவில்லை. அவருக்கும் நல்ல வருமானம் இருக்கத்தான் செய்தது. பொதுமக்களிடம் அவர் மதிப்பு குறையவில்லை. எங்களில் சில நன் மாணாக்கர்கள் இருவர் வீட்டிற்கும் போய் வருவோம். இருந்தாலும் இருவரிடையேயும் மனக் கசப்பு வளர்ந்து கொண்டுதான் வந்தது. சில சமயம் பள்ளியிலேயே வாய்ச்சண்டை விளைவதும் உண்டு. எங்கள் காலச் சிறுவர்கள் ஆசிரியர்களிடம் பயபக்தியுடன் பழகுவார்கள். இந்தச் சண்டை அந்தப் பயபக்தியை ஒரளவு குறைக்கச் செய்தது இருவரது கீழான பண்புகள் அடிக்கடி தலைக்காட்டலாயின. எப்படியோ ஒருவர் மற்றவருக்குப் போட்டியாக உள்ளதாக இருவருமே நினைத்துக் கொண்ட தாக நான் கருதுகிறேன். அப்போது சிந்தித்துப் பார்க்கும் பக்குவம் என்பால் இல்லையாயினும் இப்போது அதனைச் சிந்தித்து அறிய முடிகின்றது. இருவரிடையேயும் மாறுபட்ட உள்ளக் கிளர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன. ஒருவரிடம் தனக்கு ஆங்கில அறிவு உண்டு என்ற உயர்வுச் சிக்கலும் (Superiority complex) losi,GossGalińl-lb gloé@ offiála, அறிவு இல்லை என்ற தாழ்வுச் சிக்கலும் (Inferiority complex)தோன்றிவிட்டன. உளவியல் உண்மைப்படி உள்ளக் கிளர்ச்சிகளைச் சிதைத்தல் முடியாது. இந்தச் சிக்கல்கள் இருவரிடையேயும் நிரந்தரமாக அமைந்துவிட்டன என்று கருதலாம். மேற்பரப்பில் இக் கோளாறுகள் தலைகாட்டா விடினும் இவை உள்ளுக்குள்ளேயே கனிந்து கொண்டுதா னிருக்கும். வாய்ப்பு வருங்கால் விரும்பத் தகாத முறையில்