பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நினைவுக் குமிழிகள்-1 இயலும். இங்ங்னம் வாழ்க்கையில் பலரிடம் நிகழும் செயல் கட்கு உளவியல் நல்ல விளக்கம் தருகின்றது. வேலூர் வாத்தியாருக்குச் சோதிடத்தால் பொதுமக்க ளிடையே மிகுந்த செல்வாக்கு வந்ததென்றால், சுப்பராய உடையாருக்கு அத்தகைய செல்வாக்கு வராமல் போகுமா என்ன? இவருடைய எடுப்பான உடல் தோற்றம், கரிய நிறமாயிருந்தாலும் முகப் பொலிவு, கருகரு என்ற அளவான முருக்கு மீசை - இவையே மக்களைக் கவர்ந்தன. இவருக்கு நாட்டு வைத்தியமும் தெரியும். இலேகியம், பல்வேறு வகை குளிகைகள், பல்வேறு வகை பஸ்மங்கள் செய்யத் தெரியும். தவிர, ஆங்கிலமும் தெரியுமாதலால் மிக விரைவாகப் பொது மக்களிடம் செல்வாக்குப் பெற்று விட்டார். தனிப்பட்டபாடம் : ஆங்கிலத்தைத் தம்வீட்டில் சொல்லிக் கொடுத்தார். மாலை 6 முதல் இரவு 8 அல்லது 8 மணி வரையில் ஆங்கிலம் கற்றுத் தரப்பெறும். இதற்கு ஒவ் வொரு மாணாக்கனும் மாதம் ஒரு ரூபாய் கட்டணமாகத் தரவேண்டும். இப்படிச் சுமார் பதினைந்து மாணாக்கர்கள் சேர்ந்து படிக்கத் தொடங்கினர். மூன்று குழுவாக அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படித்தனர் மாணாக்கர்கள். பள்ளியிலும் வட்டிக் கணக்கு, இலாபநஷ்டக் கணக்கு முதலியவற்றையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். இ த னா ல் மாணவர்களிடம் நல்ல புகழுடன் விளங்கினார். இவரும் பொதுமக்களுக்கு புரோ நோட்டு எழுதுதல் போன்ற தொண்டையும் புரிந்துவர லானார். நடுத்தர வ ய து ைட ய வ ர்; இந்த வயது எல்லையுடையவர்களிடையே இவர் செல்வாக்கு ஓங்கியது வேலூர் வாத்தியாருக்குச் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மூட்டை நெல் சம்பள மாகத் தருவது வழக்கம். அந்த வருமானம் எல்லாம்