பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைப் பள்ளியில் 85 மாணாக்கர்களை அடக்கி வைத்தது. ஊர்ப் பெருமக்களும் இத்தோற்றத்தால் ஈர்க்கப்பெற்றனர். அந்தக் காலத்தில் ஊர்ப் பெருமக்களிலும் சிலர் வெளியூர் செல்லும் பொழுது (நகர்ப் புறத்திற்குச் செல்லும் பொழுது)சட்டை அணிவதைப் பார்த்திருக்கின்றேன். உள்ளுரில் நான் படித்த காலத்தில் சட்டையும் அணிந்ததில்லை; பனியனும் போட்டுக் கொண்ட தில்லை. வேலூர் வாத்தியார் சட்டை போட்டுக் கொள்ளா; விட்டாலும் நல்ல அழகுப் பொலிவுடன் திகழ்ந்தார். பொன்னிறமான மேனி, நெற்றியில் விபூதிப் பட்டை சந்தனப்பொட்டு, உடல் முழுதும் பட்டையான சந்தனக் கோடும் விபூதிப்பட்டையும்அணிந்துகொண்டு குடைபிடித்துக் கொண்டு அவர் பள்ளிக்கு வருவது தென்முகக் கடவுளே பள்ளிக்கு "ஞானோபதேசம் செய்வதற்கு வருவதுபோல் காட்சியளிக்கும், இதற்குமேலாக நெஞ்சில் பளபளக்கும் இலிங்கம் இவரது பொலிவினைச் சிறப்பிக்கும். பள்ளியிலும் அவருக்குத் தெரிந்தவரையிலும் வஞ்சகமின்றிக் கற்பிப்பார் மாணாக்கர்களும் அவரிடம் அளவற்ற அன்பு காட்டினர். கருத்து மாறுபாடு-மோதல்கள் : தனிக்காட்டு ராஜா' போல் இருந்து தம் வாழ்க்கையில் பெரும் பகுதியை மதிப்பாக ஒரூரிலேயே கழித்த வேலூர் வாத்தியாருக்கு சுப்பராய உடையாரின் பிரவேசம் சற்று அதிர்ச்சியைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த அதிர்ச்சி வெளியில் அதிகமாகத் தென்படவில்லை யென்றாலும் புலத்தில் புலனாகாது மெக்ஸிகோவிலிருந்து அட்லாண்டிக் கடலை நோக்கிக் கடலடியில் செல்லும் வெப்ப நீரோட்டம் போல் உள்ளுக்குள் புகைந்து கொண்டுதான் இருந்திருக்கவேண்டும். அப்படியில்லாவிடில் பள்ளியில் இவர்களிடையே அடிக்கடி நேரும் வாக்குவாதத்திற்குக் காரணம் இல்லை. உளவியல் தத்துவப்படி இவ்வாறு நிகழ்வதற்குக் காரணமும் காட்ட