பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நினைவுக் குமிழிகள்-1 யொட்டியும் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் சேர்ந்ததை யொட்டியும், ஒரு Higher Grade ஆசிரியர் அமர்த்தப் பெற்றார். இவர்தான் தலைமையாசிரியர்: இவருக்குக்கீழே தான் வேலூர் வாத்தியார் பணியாற்ற வேண்டும். இப்பொழுது இங்கே வர இருக்கும் ஆசிரியர் சுப்பராய உடையார் என்பவர். இவர் வருவதற்கு முதல் நாளே என் போன்ற மாணாக்கர்களின் துணை கொண்டு நல்ல மேசை, நல்ல நாற்காலி இவற்றைத் தாம் இருக்க வேண்டிய இடத்திற்கு மாற்றிக் கொண்டார் வேலூர் வாத்தியார். தமக்குமேல் பணியாற்ற இருக்கும் சுப்பராய உடையாருக்கு சற்று உடைந்த மேசை, ஒரு பக்கம் கைதாங்கி உடைந்த நாற்காலி இவற்றைப் போட்டு வைத்தார். என்ன செய்வார் உடையார்? இவற்றைக் கொண்டுதான் காலந்தள்ள வேண்டியவரானார். வேலூர் வாத்தியார் ஒராசிரியராகப் பணியாற்றும்வரை சட்டைபோட்டுபார்த்ததில்லை.தணிக்கையாளர்வரும்போது போடுவார் போலும். கோட்டாத்துரரில் பயின்ற நான்கைந்து ஆண்டுகளிலும் எந்தத் தணிக்கையாளரும் அந்த ஊருக்கு வரவில்லை; வந்ததாக எனக்கு நினைவும் இல்லை. ஆனால் சுப்பராய உடையார் வந்தவுடன் ஓர் அரைக்கை சொக்காய் போடத் தொடங்கினார். அதுவும் வேண்டா வெறுப்பாக. பள்ளி நேரத்திற்குப் பிறகு அதைக் கழற்றி எறிந்து விடுவார். சுப்பராய உடையார் சில சமயம் அரைக்கை சட்டையும் சில சமயம் முழுக்கை சட்டையும் அணிவார். அதன்மேல் ஒரு துண்டோ மடித்த அங்கவஸ்திரமோ அணிந்து கொண்டு வந்ததாக நினைவு. முறுக்கு மீசை, கனத்த உடல், சிட்டுக் குடுமியுடன் சேர்ந்த நல்ல கறுத்த முடியிலான கொண்டை இவற்றை இயல்பாகக் கொண்டிருந்த உடையாருக்கு சட்டை யும் அங்கவஸ்திரமும் நல்ல தோற்றத்தைத் தந்தன. பார்ப் பதற்கு கம்பீரமாக இருப்பார். இந்தத் தோற்றமே