பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கநிலைப் பள்ளியில் 83 மாகச் சில பாடல்களை மட்டிலுமே சொல்லித் தருவார். இவருக்குப் பிடித்தது அரிச்சந்திரபுராணம். இதைத் தான் குறிப்பிட்ட சிலருக்கு அதிகமாக விரும்பிச் சொல்வார். கற்பித்தமுறை : இவர் பாடம் சொல்லித் தரும் முறை சிறப்புடையது. ஆசிரியரிடம் புத்தகம் இல்லை; மாணாக்கன் புத்தகத்தை வைத்துக்கொண்டே காரியத்தை நிறைவேற்றி விடுவார். ஆசிரியரும் மாணவனும் ஒரே பக்கத்திலுள்ள பாடலைப் பார்க்க வேண்டும். சற்று வளர்ந்த பையனாக இருந்தால் சுமார் அரைமணி நேரமாகவாவது குனிந்து கொண்டு நிற்க வேண்டிவரும். இடுப்புவலி வந்துவிடும். ஆசிரியர் சற்று இசையோடு பாடலின் அடியில் சிறிது சிறிதாகச் சொல்லி வருங்கால் மாணாக்கன் அவரைப் பின் பற்றிச் சொல்லிக்கொண்டே வருதல் வேண்டும். ஒரு பிற்பகல் மூன்று அல்லது நான்கு பேருக்குத்தான் இவ்வாறு பாடம் சொல்ல முடியும். ஆசிரியர் வெற்றிலை அடிக்கடி போடுவார். வாய் நிறைய சதா வெற்றிலைச்சாறு ஊறிய வண்ணம் இருக்கும். ஆசிரியர் அரிச்சந்திர புராணச் செய்யுளை நிறுத்தி நிறுத்திப் படிக்கும்போது புத்தகத்தின் பக்கம் முழுவதும் வெற்றிலைச் சாறின் துளிகள் நிரப்பப் பெற்று செம்புள்ளிகள் காட்சியளிக்கும். கட்டமைந்த நூலின் மூன்று பக்க முகப்பிலும் (நூல் மூடியிருக்கும் நிலையிலும்) கட்டமைப்போர் செம்புள்ளிகள், அல்லது பச்சைப் புள்ளிகளால் அழகு படுத்தியிருப்பர். இது புற அழகாகும். ஆசிரியர் வெற்றிலை எச்சில் துளிகள் நூலின் உட்பக்கத்தில் சிதறி அக அழகைச் செய்துவிடும் ! நூலின் ஏடுகளைத் திருப்பினாலே ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடங்களைக் கணக்கிட்டுச் சொல்லி விடலாம். புதிய ஆசிரியர் : ஒராசிரியர் பள்ளி ஒழுங்காக நடை பெறவில்லை என்பது தணிக்கையாளர் குறிப்பு. இதனை