பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நினைவுக் குமிழிகள்-1 வாத்தியார் (பெயர் சந்திரசேகரய்யர் என்பதாக நினைவு) என்ற புகழ்பெற்ற ஆசிரியர் அதில் பணியாற்றி வந்தார். syari GG5 Lower Grade ஆசிரியர்: ஆங்கிலம் அறியாதவர். அவருக்குச் சோதிடம் நன்கு தெரியும். ஊரிலுள்ளோருக்குப் புரோ நோட்டுகள் எழுதித் தருவார். ஊர்ப் பெருமக்கள் அடிக்கடிப் பள்ளிக்கு வந்து ஏதேதோ பேசிவிட்டுப் போவார் கள். இதனால அந்தச் சிற்றுாரில் இவர் மிகவும் புகழோங்கி இருந்தார். பள்ளி ஒரு வாடகைக் கட்டடத்திலிருந்து வந்தது. பள்ளி உள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கும். வெளியிலுள்ள திண்ணைகளில் ஒன்றிரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதைகளைப் பேசிக் கொண் டிருப்பர். பட்டி ரெட்டியார் வீடு என்று வழங்கும் ஒரு வீடு பள்ளிக்கு 100 அடி தொலைவில் இருந்தது. அந்த வீட்டி லுள்ள வயோதிகர் ஒருவர் முற்பகல் ஒரு தடவையும் பிற்பகல் ஒரு தடவையுமாக ஒரு "சிமிட்டா பொடிக்காக வேலூர் வாத்தியர்ரைப் பள்ளியில் சந்தித்து ப்ொடியைப் பெற்றுச் செல்வார். இது வழக்கமாக அன்றாடம் நடை பெற்று வந்த நிகழ்ச்சி. ஏதோ பாட நூல்களும், சிவிக்ஸ் என்ற பாடநூலும், கணித நூலும் பாட நூல்களாக இருந்து வந்தனவாக நினைவு. வேலூர் வாத்தியார் இவற்றைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. வாய்பாட்டினை மனப்பாடம் செய்யச் சொல்வார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளையும், ரூபாய் அணா பைசா கணக்கில் இந்த நால்வகைக் கணக்குகளையும் தெளிவாகச் சொல்லித் தருவார். இவற்றைத் தவிர, அருணகிரி அந்தாதி, அறப்பkசுர சதகம், அரிச்சந்திர புராணம், இவற்றை வாங்கச் செய்து ஒவ்வொன்றிலும் சில பாடல்களைச் சொல்லித் தருவார். எல்லோருக்கும் சதகங்களை அதிக மாகச் சொல்லித் தருவார். அங்கொன்றும் இங்கொன்று