பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க நிலைப் பள்ளியில் 81 அநுபவத்தால் தெரிந்த உண்மையாகும். சுமார் இருப தாண்டுக் காலம் இந்தச் சொந்தப் பண்ணை நடைபெற்று வந்தது. நான் முசிறியில் நான்காவது படிவத்தில் மாணாக்க னாக இருந்த ஆண்டில் (1931) சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை செடிகள் வைத்தேன். நான்கு ஐந்து ஆண்டு களில் அவை காய்த்தன. நான் திருச்சியில் இடைநிலை வகுப்பு படித்த காலத்தில் காய்ப்பு தொடங்கியது. ஆனால் சரியான விலை இல்லை. 100 பழம் (பெரிய அளவு) சுமார் ஒன்றரை, இரண்டு ரூபாய்க்கு விற்றன. அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய்ச் செடிகள் வைக்கப்பெற்றன. நல்ல காய்ப்புதான். ஆனாலும் சரியான விலை இல்லை. எலுமிச்சைக்கும் மிளகாய்க்கும் நல்ல விலை இருந்திருப்பின், என் கல்லூரிப் படிப்பு கவலையின்றி நடைபெற்றிருக்கும். எங்கட்கு வேளாண்மை பலிக்காததுபோலவே என் தம்பி குடும்பத்திற்கும் வேளாண்மை பலிக்கவில்லை. அவன் தந்தையார் இதில் பகீரதப் பிரயத்தனம்’ செய்தார். பயன் ஒன்றும் அதிகமாக இல்லை. கிணற்றில் சரியான அளவு நீர் இல்லை. ஆழமாக வெட்டுவதற்கும் பாறை குறுகிட்டது. நாங்கள் எலுமிச்சைபயிரிட்டது போலவே அவரும் எலுமிச்சை யும் மாதுளையும் பயிரிட்டார். சில ஆண்டுகளில் சரியான வருவாய் இல்லாத காரணத்தால் மாதுளைச் செடிகள் வெட்டி யெறியப்பட்டன. எலுமிச்சை காய்த்தாலும் சரியான விலை இல்லை. குமிழி-10 10. தொடக்கநிலைப் பள்ளியில் 15ரின் கோட்டாத்நூர் வந்ததும் அந்த ஊரிலுள்ள கழகத் தொடக்கநிலைப்பள்ளியில் சேர்க்கப்பெற்றேன்.அஃது ஒரே ஆசிரியரைக் கொண்ட பள்ளி. அப்போது வேலூர் سب 6 سبسـ