பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நினைவுக் குமிழிகள்-1 பிரித்தெடுக்கப்படும். வரகு, கொத்தமல்லி, ஓமம், பருத்தி, ஆமணக்கு விற்பதில் ரூபாய் 400, 500 கூட வருவாயாக வருவ தில்லை. கொத்தமல்லி மூட்டை நான்கு, ஐந்து ரூபாய்க்கு மேல் விலை இல்லை. நெல்விலையும் ஒரு கலம் மூன்று, நான்கு ரூபாய்க்கு மேல் இல்லை. இந்த வருவாயைக் கொண்டு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று என் அன்னையார் கருதினது குருடன் இராஜவிழி விழிப்பது போல் இருந்தது. திக்கற்றவருக்குத் தெய்வம் துணை நிற்கும் என்ற கொள்கையில் என் அன்னை யார் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இளமையிலேயே என் தந்தையார் மறைந்ததால் ஓர் ஆணின் துணிவும் என் அன்னையாருக்கு இறைவன் தந்திருக்க வேண்டும். இந்த நிலையில் சொந்தப் பண்ணை' வைத்தால் குடும்ப வருவாயை அதிகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொந்தப் பண்ணை வைத்தார்கள். கையில் ஒன்றிரண்டு ஆயிரம் ரூபாய் இருந்ததாக நினைவு. ரூ. 250/-க்கு இரண்டு எருதுகள் வாங்கப் பெற்றன. மருதப் பிள்ளை என்ற ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கு மாதம் ஒரு மூட்டை நெல் சம்பளமாகத் தருதல் வேண்டும். தேவையானபோது பெரிய ஆள், சின்ன ஆள் ஒன்றிரண்டு நாட்களுக்குத் தற்காலிகமாக அமர்த்திக் கொள்வார்கள். சொந்தப்பண்ணை வைத்ததால் அதிசயிக்கத்தக்க வருவாய் ஒன்றும் ஏற்படவில்லை. கையிருப்பாக இருந்த ஒன்றிரண்டு ஆயிர ரூபாய்கள் கரைந்தன. வேலையே அதிகமாயிற்று; முட்டு வழிச் செலவும் வளர்ந்தது. 'சாணேற முழஞ்சருக்கியது” போன்ற முன்னேற்றம் தெரிந்தது.

  • உழவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்ற பழமொழி எங்கள் சொந்தப் பண்ணை வைத்த