பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் செல்வநிலை மாறிய நிலை 79 இயற்கைக் கடன்கள் கழிக்க கையைப் பிடித்து நடத்திச் செல்ல வேண்டும்; சில சமயம் என் அன்னையாரும் கவனிப் பார்கள். ஒரு சில ஆண்டுகளில் இவர்களும் காலகதி அடைந்தார்கள். பெரகம்பியிலிருந்து என் அம்மானும் மனைவியுடன் வந்தார். எங்கள் செலவில் ஈமக் கடன் களைச் செய்தார். பதினைந்தாம் நாள் சடங்கு பெரகம்பி யில் செய்யப் பெற்றது. நானும் என் அன்னையாரும் அதற்குச் சென்றிருந்தோம். ஒரு வகையில் என் படிப்புக்குத் தடையாக இருந்த என் பாட்டியின் மறைவால் தடை நீங்கியது என்றே சொல்ல வேண்டும். எங்கள் வருவாய் : எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை மனநிறைவு பெறத் தக்கதாக இல்லை. குத்தகைக்கு நிலம் விடப்பெற்றிருந்த காலத்தில் 20 கலம் நெல் சிரமமின்றி வரும். சொந்தப் பண்ணையில் புன்செய் வேளாண்மையில் வரகு 20 கலம் வரலாம்; கொத்தமல்லி 15-20 கலம் வரலாம்; ஓமம் 2 மூட்டை வந்தது; ஆமணக்கு 5 செக்கு போடும் அளவுக்கு வந்தது. பருத்தி 10-15 கோணி பிடிக்கும் அளவுக்கு வந்தது. வரகு அடித்து முட்டை போட்டு வீட்டிற்குக் கொண்டு வருவதற்குச் செலவு வரும். வரகு விளைந்த தாளை அறுவடை செய்து களத்திற்குச் கொணர்ந்து அடுக்குதல், களத்தில் இடங்கிடைக்கும்போது தாளிலிருந்து வரகுமணியைப் பிரித்தல், வைக்கோலை மாடுகளை விட்டுச் சுற்றுதல், பிறகு வைக்கோலைப் போரிடுதல்-இவற்றிற்குச் செலவு ஆகும். இங்ங்ணமே கொத்தமல்லியைப் பிரித் தெடுக்கும்போதே ஓமமும் பிரித்தெடுக்கப்படும். ஆமணக்கு, பருத்தி இவற்றை என் தாயாரே நாள்தோறும் காலையில் சென்று சிறிது சிறிதாக வீட்டிற்குக் கொணர்ந்து விடுவார் கள். வீட்டில் பருத்தி கொளிஞ்சியிலிருந்து பிரிக்கப்பெறும். ஆமணக்குக் காய் வெயிலில் உலர்த்திப் பருப்பு தனியாகப்