பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நினைவுக் குமிழிகள்-1 எடையுள்ள காப்பும் கொலுசும் வீட்டிலிருந்த சில சவரன் சளும் விற்கப்பெற்று வீடு கட்டின. இந்தச் செலவுக்கு ஈடு செய்யப் பெற்றது என்பதையும் இப்பொழுது நினைவு கூர முடிகின்றது. கோட்டாத்துாரில் இருக்கும்போது (8-வயது) என் பாட்டி தம் அருகில் என்னைப் படுக்க வைத்துக் கொள்வார் கள். தம் மகன், பேத்தி இவர்கள்மீது இருந்த பாசமெல் லாம் என்மீது கவிந்தன. வீட்டில் பாட்டியோ பாட்டனோ குழந்தைகள்மீது அதிகமாக அன்பு காட்ட வேண்டும் என்பது உண்மைதான். குழந்தைகள் தமக்குப் பாதுகாப்பு உள்ளது என்பதை நன்கு உணர்வதற்கு இந்த அன்பு, பாசம் எல்லாம் மிக மிக அவசியமானவை. ஆனால் படிப்பு நன்கு அமையவேண்டுமானால் குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு மூத்தோரின் கண்டிப்பும் மிகவும் இன்றியமையாதது. கல்வி உளவியல் அறிவு வீட்டிலுள்ள மூத்தோர்கள் பெற்றிருப்பின் இது நன்கு தெளிவாகும். என் பாட்டிக்கு இஃதெல்லாம் எப்படித் தெரியப் போகிறது? நான் வெளியூருக்குப் படிக்கப் போகிறேன்' என்று சொல்லும் பொழுதெல்லாம் கண்ணிர் விடுவார்கள். மிகவும் தள்ளாத நிலையை அடைந்து விட்டார்கள். மாட்டுக் கொட்டகையில் நல்ல இடத்தில் அவருக்குக் கட்டில் முதலியன தந்து இடம் அமைக்கப் பெற்றது. இயற்கைக் கடன்கள் கழிக்க இதன் அருகிலுள்ள குப்பைக் குழி நல்ல வசதியான இடம். பெரகம்பியிலிருந்து வந்த மூன்று ஆண்டுகளில் என் பாட்டியாருக்குக் கண்ணொளி மங்கியது. கிராமத்திற்கு வந்த ஒரு நாட்டு வைத்தியரைக் கொண்டு ஒரு கண் அறுவை சிகிச்சை செய்யப்பெற்றது. சிறிது காலம் ஒளி திரும்பியது: மீண்டும் மங்கியது. கண்ணொளி மங்கிய நிலையில் நான்