பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் செல்வநிலை மாறிய நிலை 77. என் அன்னையாரும் பங்காளி வீட்டாரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அந்தச் சிறு வயதிலும் என்னால் அறிய முடிந்தது. பதினைந்தாவது நாள் நடைபெற வேண்டிய சடங்கு எதுமலையில் அந்த அம்மையார் பிறந்த வீட்டார் செய்தார்கள். அந்தச் சடங்கிற்கு நானும் என் அம்மையாரும் எதுமலைக்குச் சென்றிருந்தோம். இப்போதும் இது என் நினைவிலுள்ளது. எங்கள் வறிய கிலை : கோட்டாத்துரில் என் குடும்ப நிலையைப்பற்றி ஒருசில சொற்கள், இரண்டு ஏக்கர் நஞ்சை நிலமும், சுமார் மூன்று ஏக்கர் பரப்புள்ள நல்ல செழிப்பான கரிசல் பூமியும் இருந்தன. இவற்றைத் தவிர வடக்கிக் காடு' என்று வழங்கப் படுகின்ற இடத்தில் சுமார் ஓர் ஏக்கர் கரிசல் பூமியும் இருந்தது. இதில் வரகைத் தவிர வேறு எதையும் பயிரிடுவதில்லை. இதில் வருவாயும் அதிகம் இல்லை. பூர்வ புண்ணியத்தால் ஏதோ சிறிது வந்து கொண்டிருந்தது. இவற்றைத் தவிர என் அன்னையார் தம் சொந்த சேமிப்பைக் கொண்டு ஒன்றரை ஏக்கர் பரப்புள்ள நல்ல வளமான கரிசல் பூமியையும் வாங்கி இருந்தார்கள். ஊருக்குள் ஒரு மாட்டுக் கொட்டகையும், வைக்கோல் போர் குப்பை இவை போடுவதற்குரிய ஒரு சிறு இடமும் இருந்தது. மச்சு வீட்டில் எங்கட்கும் எங்கள் பங்காளி வீட்டாருக்கும் பங்கு இருந்தது. இந்த வீட்டை யொட்டி வடபுறத்தில் ஒரு கூரை வீட்டில் நாங்களும், தென் புறத்தில் நாட்டோடு வேயப்பெற்ற ஒரு சிறு வீட்டில் எங்கள் பங்காளி வீட்டாரும் இருந்தனர். இரண்டு வீட்டிற் கும் இடையிலுள்ள முற்றம் இருவருக்கும் சொந்தமாக இருந்து வந்தது. நான் வந்த மறு ஆண்டே கூரை வீடு மங்களுர் ஒட்டு வீடாகப் புதுப்பிக்கப்பெற்றது. அப்போது ரூ. 250 = தான் செலவு என்பதையும் இப்போதும் நினைந்து பார்க்க முடிகின்றது. என் கையிலிருந்த பத்து சவரன்