பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நினைவுக் குமிழிகள்-1 குச் செய்யப் பெற்றன. யான் பெரகம்பியிலிருந்து கோ ட் டாத் துார் வந்த இரண்டாண்டுகளில் இந்த அம்மையார் காலகதி அடைந்துவிட்டார்கள். அடக்கம் செய்தல் முதல் பதினைந்தாம் நாள் செய்ய வேண்டிய வைதிகச் சடங்குகள் வரை என்னை முன் வைத்தே செய்யப் பெற்றன. அந்த அம்மையார் ஏதோ நெருங்கிய உறவு என்பதை நினைந்து பார்க்க முடிகின்றதேயன்றி என்ன உறவு என்பதை இப்போதும் என்னால் அறியக்கூடவில்லை. இவர்களைத் தவிர எங்கள் மச்சு வீட்டு ஓர் அறையில் என் பங்காளி வீட்டாருக்குச் சொந்தமான பகுதியிலிருந்த ஒர் அறையில் எதுமலை அம்மாள்," என்று அழைக்கப்பெறும் வயது முதிர்ந்த கைம் பெண் நிலையிலுள்ள ஒர் அம்மையார் வாழ்ந்தார்கள். ஹாலில் ஒரு மூலை அ வ ரு க் கு ச் சமையலறையாகப் பயன்பட்டது. இந்த அம்மையாருக்குச் சொந்தமாக எழுபத்தைந்து சென்ட் அளவுள்ள ஒரு நஞ்சை நிலம் இருந்தது. அதன் வருவாயைக் கொண்டு காலந் தள்ளினார்கள். இவர்கள் குழந்தைகளிடம் அன்பாகத் தான் இருந்தார்கள். ஆனால் என் தமையன் மகன் கணபதி யிடம் காட்டிய அளவுக்கு என்னிடம் அன்பு காட்டுவதில்லை. ஏதாவது தின்பண்டம் தந்தாலும் நான் இல்லாதபோது அவனுக்குத் தருவார்கள். என் அன்னையாரே இதனை அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. அந்தச் சிறுவயதில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளால் குறிப்பாக எனக்கும் புலப் பட்டது. எங்கள் பங்காளி வீட்டில் ஏதாவது தின்பண்டங் கள் தந்தால் அவற்றை வாங்கக் கூடாது என்பது என் அன்னையாரின் தடை உத்தரவு. ஆனால் இந்த அம்மையார் தந்தவற்றை மறுக்கவேண்டா என்பது அவர் களின் ஆணை. இந்த அம்மையாரும் நான் வந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்டார்கள், சமச்சடங்கிற்குரிய செலவுகளை