பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் செல்வநிலை மாறிய நிலை 75 அருணகிரியந்தாதி, அரிச்சந்திர புராணம் ஆகிய நூல்கள் அனைத்தையும் என் அம்மானிடம் சேர்க்குமாறு அனுப்பிவிட்டார்கள். இச் செயலில் எவ்வளவோ பொருள் அடங்கியுள்ளது. "இது காறும் தாங்கள் என் மகனைத் தந்தை போலும் தாய் நிலையிலும் இருந்து வளர்த்தமைக்கு என் நன்றி. தாங்கள் அன்புடன் என் மகனுக்குத் தந்த பொருள்களையெல்லாம் திருப்பி அனுப்பி வைத்துள்ளேன் . ஆண் மகவு பெற்றால் அக் குழந்தைக்கு இவற்றைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். என் வறிய நிலையிலும் இறைவன் அருளால் என் பிள்ளை நன்கு வளர்வான்; உயர் கல்வி பெறவேண்டும் என்ற கனவும் உள்ளது. இறையருள்படி அது நடைபெறக் கூடியதே என்ற நம்பிக்கையும் உண்டு......" இவை போன்ற பல கருத்துகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். சரிகை வேட்டியையும் பட்டையும் திருப்பித் தந்தது எனக்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. நூல்களின் பிரிவையும் என்னால்தாங்க முடியவில்லை. பள்ளிச் சிறுவனுக்குச் சரிகை வேட்டியும் பட்டும் எதற்கு? மாணிவாழ்க்கை தானே, படிப் புக்கு ஏற்றது? நூல்களையெல்லாம் புதியனவாக வாங்கித் தந்து விட்டார் என் அன்னையார். இதனால் எனக்கு ஒரளவு மனநிறைவு ஏற்பட்டது. கோட்டாத்துார் சூழ்நிலை எனக்கு அப்போதும் பிடிபட வில்லை; இப்போதும் நினைத்துப் பார்க்கும் அறிவும் தெளிவும் இல்லை. எங்கள் வீட்டு மாட்டுக் கொட்டகைத் தருகிவிருந்த(மாடுகள் அப்போது இல்லை)ஒரு கூரை வீட்டில் வயது முதிர்ந்த கைம்பெண் நிலையடைந்த ஒர்.அம்மையார் இருந்தார்கள். என் அன்னையார்.அவர்கட்கு உணவு முதலிய வசதிகள் செய்து தந்தார்கள்; நீராட்டி ஆனடகளை மாற்றி னார்கள். தாம் பெரகம்பிக்கு வரும் ஒரு சில நாட்களில் யாரைக் கொண்டோ, இந்த வசதிகள் அந்த அம்மையாருக்