பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நினைவுக் குமிழிகள்-1 யின் பங்கு இதில் செயற்படவில்லை. இரு க் கு ம் சூழ்நிலையை அனுசரித்து இருவரும் வெளிநடப்பு' செய்தார்கள். இந்தச் சூழ்நிலையில் எனக்கும் அதே நிலை ஏற்பட்டது. தாயுடன் கன்றும் செல்ல வேண்டியது தானே முறை? 'ஏழிரண்டாண்டில் வா’ என்று கைகேயி சொன்னது போல் இங்கு ஒருவரும் சொல்லவில்லை. எல்லாம்; பேசாத பேச்சாகவே நடைபெற்றன. நிரந்தரமாகவே இப்பிரிவு ஏற்பட்டது என்பது எனக்கு அப்போது தெரியாது. ஏதோ பிணங்கிச் செல்கின்றனர் என்றுதான் இச் சிறுவன் உள்ளம் எண்ணியது. இந்தச் சூழ்நிலையில் அப்பொழுதலர்ந்த செந்தாமரைப் போல்' என் திருமுகம் மாறவில்லை; அந்தச் செந்தாமரையினையும் வெல்லவும் இல்லை. "மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதிலும் இத்தி ருத்துறந் தேகென்ற போதிலும் சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை ஒத்தி ருக்கும் முகத்தினை" யாரும் பார்க்கவில்லை. தீராத விளையாட்டுப் பிள்ளை' யாகவே கோட்டாத்துார் வந்து சேர்ந்தேன். கோட்டாத்துார் நான் வந்த பிறகும் என் அன்னை என் முந்திய நிலையை அடிக்கடி நினைந்து பார்த்திருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. என்ன நினைத்தார் களோ எனக்குத் தெரியாது; ஒரு நாள் பெரகம்பிலிருந்து வந்த யாரோ ஒருவரிடம் எனக்கு இரண்டாவது திருமணத் தன்று அன்பளிப்பாகத் தந்த சரிகை வேட்டி, சரிகை சட்டம் போட்ட நீல நிறமுள்ள பட்டு, புதியனவாக வாங்கித் தந்திருந்த விவேக சிந்தாமணி, அறப்பளிசுரசதகம் 4 கம்ப. சுந்தர, காட்சி, 20