பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-9 9. என் செல்வநிலை மாறியநிலை பெரிய பண்ணைச் செல்வத்தில் பாங்குடன் வளர்க் கப் பெற்று எல்லா வித நலன்களையும் துய்த்த நான் அந்த நலன்களை ஒரளவு கூட நன்கு அநுபவிக்க முடியாத என் சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இந்திர பதவிக்குக் கூட ஒரு கால எல்லை உண்டு என்று நூல்கள் வாயிலாக அறிகின்றோம். அது போன்ற நிலை எனக்கு ஏற்பட்டது என்று சொல்லலாம். என் அன்னையார் இவற்றையெல் லாம் நினைந்து நினைந்து மனம் புழுங்கியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகின்றது; அந்தக் காலத்தில் எனக்கு இவற்றையெல்லாம் நினைந்து பார்க்கும் அளவுக்கு மனம் முதிர்ச்சி ஏற்படவில்லை. வீட்டை விட்டு வெளியே நடந்து செல்க' என்று எங்களை என் அம்மான் நேரில் சொல்லவும் இல்லை; பிறர் வாயிலாகத் தெரியப்படுத்தவும் இல்லை. தாயும் தந்தையு மாக இருந்து என்னை வளர்த்த என் அம்மான் ஒரு நாளும் அப்படிச் சொல்ல மாட்டார். இருக்கும்போதும் மனைவி யுடன் வாழ இயலாத இளமைக் காலத்தை என் பாட்டியும் அன்னையும் நினைந்து பார்த்திருக்க வேண்டும் தமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் தம் ஒரே மகன் தன் இரண்டாவது மனைவியுடனாவது 'சுகமாக இருக்கட்டும்’ என்று என் பாட்டியின் தாயுள்ளம் நினைந்து பார்க்க வேண்டும். மருந்தனைய தங்கை” யாகத் தம்மைக் கருதிய தன் அருமைத்தமையன் மனம் சிறிதும் நோகக்கூடாது என்று என் அன்னையும் கருதியிருக்க வேண்டும். இருவரும் அப்படி நினைந்திராவிட்டால் இரண்டாவது திருமணத்திற்குப் பிறகும் என் அம்மானின் இல்லற வாழ்க்கை இனிது நடை பெற்றிருக்க முடியாது. தாயும் மகளுமாகச் சேர்ந்து என் அம்மானின் மனநிலையைக் குலைத்திருக்கலாம். 'நாத்தி