பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நினைவுக் குமிழிகள்-1 சிறிய உருண்டைகளாகச் செய்து உண்பதுண்டு. எங்கள் வீட்டிலும் இதனைச் செய்வதுண்டு. கிடுக்கட்டியை வாயில் அடக்கிக் கொண்டு வாயில் ஊறும் உப்பு காரம் இனிப்பு' என்ற முச்சுவையும் கலந்த நீரைச் சுவைத்து அநுபவித்ததை இன்று நினைவு கூர்கின்றேன். இப்போது கூட என் வாயில் நீர் ஊறுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இந்தப் பெரிய மரங்களை வெட்டச் செய்தனர் ஊர்ப் பெருமக்களில் சில பெரியோர். அடிமரத்தை மரச் செக்கு செய்வதற்கு விற்றனர். பெருங்கிளைகளைக்கொண்டு நான்கு சக்கரங்களைக் கொண்ட ஒரு திருவிடைச்சான் செய்தனர். ஒரிருமுறை திருமால் இதில் திருவுலாச் செல்வதைப் பார்த் திருக்கின்றேன். அதன்பிறகு பெருமாள் கோயில் முன் மண்டபத்தின் தென்புறமாகவுள்ள பகுதி சில ஆண்டுகள் அந்தத் திருவிடைச்சானுக்குப் புகலிடமாக அமைந்தது. திருமால் ஆலயத்தின் முன்மண்டபத்தின் தரை பல ஆண்டுகள் மண்ணாகவே கிடந்தது. இத்தரையின்மீது நல்ல கருங்கல் தளத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர் ஞானி பெரிய கிருட்டிணசாமி ரெட்டியாரும் வேறு சில பெரியோர்களும். ஒராண்டுக் காலத்திற்குள் இத் திருப்பணி நிறைவு பெற்றது. திருப்பணி நடக்கும்போது சிலர் திருவிடைச்சானை வெளிக் கொணர்ந்து மரத்தேர் அருகில் நிறுத்தினர். மரத்தேரின் கதி இதற்கும் ஏற்பட்டு விடுமோ என்று சிலர் அஞ்சினர். நல்லகாலமாக இது நேரிட வில்லை. ஆனால் மீண்டும் திருவிடைச்சான் என்ற நகரும் சப்பரம் முன்பண்டபத்திலேயே தஞ்சம் புகுந்தது. திருப்பணி முடிந்த பிறகு ஒரு மூலையில் அது இடம் பெற்றது. இன்றும் அது பாதுகாப்பாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.