பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த ஊர் வாசம் 71 இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளிஇ வேகின்றதால்; அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே". என்ற பெரியாழ்வாரின் பாசுரத்தை என்மனம் நினைந்து அநுபவிக்கின்றது. அந்த விழாவும் நின்று போயிற்று. எல்லாத் திருவிழாக்களிலும் இறைவன் வாகனங்களில் திருவுலாச் செல்லும்போது இறைவனுக்குப் பின்னால் ஒரு 'பசனைக் குழு இறைவன் புகழைப் பாடிக் கொண்டு செல்வது வழக்கம். எனக்குப் பாட்டு வராது; இசைக்கும் எனக்கும் வெகுதூரம். ஆனால் இரகுபதி ரெட்டியார் என்ற ஒருவர் மத்தளம் கொட்டும்போது மத்தளத்தில் ஒரு பக்கம் ஒட்டப் பெற்றிருக்கும் சோற்றுப்பசை உலராமல் இருப் பதற்கு தண்ணிர் தேவைப்படும். அதற்கு தண்ணிர் கொண்ட ஒரு சிறு கிண்ணத்தைத் தாங்கி செல்லும் கைங்கரியம்' என்னுடையதாக இருந்ததை இப்போது நினைந்து பார்க்க முடிகின்றது. பசனை மடத்தருகில் மரத்தேர் ஒன்று நிலையாக நின்று கொண்டிருந்தது. அது வெய்யிலாலும் மழையாலும் கெடா திருப்பதற்கு மேலே கூரை வேயப் பெற்றிருந்தது. நாளடைவில் கூரை அழிந்தது; தேரும் அழிந்து கொண்டே இருந்தது. ஊருக்கு மேற்புறத்திலுள்ள ஏரிக் கரையின்மீது மிகப் பெரிய பல இலுப்பை மரங்கள் இருந்தன. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை' என்பது பழமொழி யல்லவா? இந்த மரங்களின் கீழ் இலுப்பைப் பூ உதிர்ந்து கிடக்கும். இவற்றைப் பொறுக்கிச் சேர்த்து உப்பு, மிளகாய் இவற்றுடன் சேர்த்தது கிடுக்கட்டி' என்ற பெயர் கொண்ட 3. பெரியாம். திரு. 5. 4.2