பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நினைவுக் குமிழிகள்-1 தெரியாமல் மழை பெய்தலால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக மூத்தோர்பேசிக்கொள்வதைச் சிறுவர்களாகிய நாங்கள் கவனித்துத் தெரிந்து கொள்வோம். கட்டடம் கட்டுவதற்கு வேண்டிய மணலை இந்த ஆற்றிலும் ஊருக்கு வடமேற்கிலிருந்று ஏரிக்கு நீர் வரும் ஆற்றிலும் எடுத்துப் பயன்படுத்துவர். ஊர் மக்கள் நீராடுவதற்கு பல நீர் நிலைகள் உள்ளன. ஏரி பெருகி கடை வழிந்த பிறகு கடைக்காவில் பலர் குளிப்பர். ஏரியில் நீர் இல்லாத பொழுது ஊருக்கு அருகில் மேல் புறத்தில் தனியாருக்குச் சொந்தமான ஐந்து கிணறு களையும், ஊருக்கு அருகில் கீழ்புறத்தில் தனியாருக்குச் சொந்தமான ஐந்து கிணறுகளையும் பயன் படுத்துவர். இந்தப் பெரிய ஊரில் இத்தனைப் பெரிய திருக்கோயில் களிலிருந்தும் அடிக்கடி விழாக்கள் நடைபெறுவதில்லை. நான் சிறுவனாக இருந்தபொழுது மாசிமகத்தன்று சிவ பெருமானைக் காளை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வருவதை ஓரிருமுறை பார்த்ததுண்டு. அதன்பிறகு இன்று வரை இத்தகைய விழா நடைபெற்றதாக நான் கேள்வியுற்றதில்லை; கண்டதும் இல்லை. இங்ங்னமே ஒரிரு முறை திருமாலின் கருட சேவையைக் கண்டதுண்டு. அந்தக் கருட சேவையை இன்று மானசீகமாகக் காண்கின்றேன் : காஞ்சி வரதராசரது கருடசேவையையும் திருமலையில் கருட சேவையையும் காண்பது போன்ற ஒர் உணர்வு ஏற்படு கின்றது. இந்நிலையில், பறவைஏறும் பரமபுருடா நீ என்னைக் கைக்கொண்டபின் பிறவிஎன்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்: