பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த ஊர் வாசம் 69 மாலை வேளைகளில் குடிசைகளில் தங்கித் தென்றலை அநுபவிப்போம். நிலவு காயும் இரவுகளில்-அதுவும் முழு மதியம் நாளன்று-இந்த அநுபவத்தால் பெறும் இன்பம் சொல்லுந்தரமன்று. பூங்கொத்து மேய்ந்த புதிய மணவறையில் ஆங்கொத்து நீவா ழரண்மனையை-நீங்கித்தான் பந்தியம் போது பசுந்தேவன் மேலிறைக்க அந்தியம் போதுவிளை யாடுவாய்" (அரண்மனை யென்றது சோலையை, பந்தி அம்போது வரிசையாகிய அழகிய மலர்கள்) என்ற பல பட்டடைச் சொக்கநாதப்பிள்ளை யவர்களின் தென்றலின் வருணனையை அப்போது சிந்திக்கும் வயது வாரா திருந்தாலும் இப்போது சிந்தித்து மகிழ முடிகின்றது. இப்பொழுது ஏரி முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந் துள்ளன. பல ஆண்டுகட் கொருமுறை அம்மரங்களை ஏலம்விட்டு அரசுக்கு வருவாயாகச் செய்கின்றனர் ஏழைகள் தெரிந்தோ தெரியாமலோ விறகு வெட்டிக் கொள்ளு கின்றனர். உழவர்கள் ஏருக்கு வேண்டிய உறுப்பினை இம் மரங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றனர். ஊருக்குக் கீழ்ப் புறத்தில் ஒரு ஃபர்லாங்க் தொலைவில் உப்பாறு ஓடுகின்றது. மழைக் காலத்தில் வெள்ளம் இதில் பெருகியோடும். சில சமயம் வெயில் காய்ந்து கொண்டிருக் கையில் மின்னாது இடித்ததுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து நுங்கும் நுரையுமாக ஓடுவதுண்டு. ஊர்ப் பெருமக்களும் பள்ளிச் சிறுவர்களும் வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதற் காகத் திரள்திரளாகச் செல்வர். சுமார் ஐந்து அல்லது ஆறு கல் தொலைவிலுள்ள பச்சை மலைத் தொடர்களில் பெய்வது 2. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது-கண்ணி (37-38)