பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நினைவுக் குமிழிகள்-1 என்ற பாடல்தான் இப்போது நினைவிற்கு வருகின்றது. பொதுவாக இன்று அரசு பரிபாலினத்திலும், மக்கள் பொது வாழ்விலும் அறமும் ஒழுக்கமும் குன்றி வருவதைத்தான் காணமுடிகின்றது. வெள்ளரிக்காய் விருந்து : ஒரிருமுறை நான் உள்ளுர்ப் பள்ளியில் பயின்ற காலத்தில் ஏரி நீர் வற்றியவுடன் ஊரில் பலர் ஏரியில் வெள்ளரி பயிரிட்டதைக் கண்டது உண்டு. சேற்றில் நடந்து சென்று பெரிய சோளத்தட்டைகளை நட்டு அடையாளமிட்டுத் தங்களுக்கென இடத்தை ஒதுக்கிவைத்துக் கொள்வர். ஈரம் காய்ந்து பதமாக இருக்கும் தருணத்தில் வெள்ளரி விதைகளை நடுவர். செடிகள் காய்க்கும் பருவம் வரும்போது தங்கள் தங்கள் இடங்களில் கம்பந்தட்டைகு சோளத் தட்டை, வைக்கோல் முதலியவைகளைக் கொண்டு குடிசைகளை எழுப்பி அவற்றில் இரவில் தங்குவர். தோடட்ம் போடாத மக்களும் அக்கம் பக்கத்து ஊர்ப் பெருமக்களும் வந்து வெள்ளரிப்பிஞ்சு,வெள்ளரிப்பழம் இவற்றை விலைக்குப் பெற்றுச் செல்வர். நாட்டுச் சருக்கரையைக் கலந்து வெள்ளரிப் பழத்தைச் சாப்பிடுவர். உப்பு-மிளகு-பொட்டுக் கடலை, உப்பு-மிளகாய்-பொட்டுக் கடலையாலான பொடி யைத் தூவி வெள்ளரிப் பிஞ்சுகளை உண்பர். காய்ப்பதற்குள் கோடைக் காலமும் வந்துவிடும். வெள்ளரிப்பிஞ்சு தேவா மிருதமாக இனிக்கும்; கோடை வெப்பத்தைத் தணிக்கும் இறைவனின் வரப்பிரசாதமன்றோ வெள்ளரிப் பிஞ்சு? நானும் நண்பர்களும் சேர்ந்து கொண்டு தோட்டம் தோட்டமாகச் சென்று வருவோம். போகும்போது சிறிய கத்தியையும் மிளகுப் பொடியையும் கொண்டு செல்வோம். சில்லரைக் காசும் எடுத்துச் செல்வோம். பெரும்பாலும் சிறுவர்களாகிய எங்கட்கு இலவசமாகவே பிஞ்சுகளை அன்புடன் வழங்குவர் தோட்டக்காரர்கள். அப்படிக் கிடைக்காத நிலையில் விலைக்கு வாங்கி உண்போம்.