பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த ஊர் வாசம் 67 முதலியவை சுமார் 25 கல் தொலைவில் தென் திசையிலுள்ள திருச்சிக்கு ஏற்றுமதி செய்யப் பெறுகின்றன. அக்காலத்தில் பேருந்தோ சிற்றுந்தோ பாரப்பொறி உந்துகளோ (Lorries) இல்லை. ஊருக்கு வடக்கில் தெற்கு-வடக்காகவுள்ள தெருவின் வடகோடியில் மார்க்கண்டன் கோயில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தென் வடலாகச் சேணியர் தெரு உள்ளது. தெலுங்கில் இவர்களைப் பத்மசாலியர்' என்று வழங்குவர். இவர்கள் தெலுங்குமொழி பேசும் பெருமக்கள். ஒருவருக்கும் தெலுங்கு படிக்கவும் தெரியாது; எழுதவும் தெரியாது. சில சமயம் இப்பெருமக்கள் மார்க்கண்டனுக்குத் திருவிழா நடத்துவர். ஊருக்கு மேற்புறம் ஊரையொட்டிப் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நீர் நிரம்பினால் குறைந்தது நான்கு திங்கள் வயல்கட்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். நான் உள்ளுர்ப் பள்ளியில் பயின்ற காலத்திலும் (1925-30), துறையூர் (1930) முசிறியில் (1931-34) படித்த காலத்திலும் ஆண்டுதோறும் தவறாமல் ஏரி நிரம்பி 10-15 நாட்கள் கடை வழியும் கிழக்கு-மேற்காகவுள்ள நடுத் தெருவிலும் பிள்ளையார் கோயில்வரை (சுமார் 300 அடி தொலைவுவரை) நீர், ஊற்றெடுத்துக் கசியும்) கடந்த நாற்பது யாண்டுகளாக, ஒரு சில ஆண்டுகளைத் தவிர, இந்த ஏரி நிரம்பி வழிந்ததைப் பார்த்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. சரியாக மழை தவறாது பெய்வதில்லை. அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர் மழை வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை புருஷ னைக்கொன்ற பூவையர்க் கோர்மழை வருஷ மூன்றும் மழையெனப் பெய்யுமே" 1. விவேக சிந்தாமணி-27.