பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நினைவுக் குமிழிகள்-1 தெருவின் நடுவில் அருகருகே பசனைமடம் கம்பத்தடிப் பெருமாள் கோயில், திருமால் ஆலயம், மாரியம்மன் கோயில் உள்ளன. பசனை மடத்தில் கண்ணன் திருவுருவம் கொண்ட ஓர் அழகிய படம் வைக்கப்பெற்றுள்ளது. திருமால் திருக் கோயில் மிக அழகாகக் கட்டப்பெற்றுள்ளது. திருமால் ஆலயத்திலும் பசனை மடத்திலும் நாடோறும் இரண்டு முறை ஒரு சோழிய பிராமணர் வழிபாடுகள் நடத்துவார். மாரியம்மன் கோயிலில் இரண்டுமுறை வழிபாடுகள் நடத்து வார் உள்ளுர்ப் பண்டாரம். அதிகாலையில் இவர் இங்கு சங்கொலியும் எழுப்புவார். கிழக்குத் தெருவின் தென்கோடியில் ஒரு மகளிர்பள்ளி உள்ளது. இதைத் தொடர்ந்து அரிசனச் சேரி உள்ளது. இங்கு பள்ளர், பறையர், சக்கிலியர், வள்ளுவர் என்ற நான்குபிரிவு அரிசனமக்கள் வாழ்கின்றனர். இவர்களில் முந்நூறு குடும்பம் இருப்பதாகச் சொல்வர். இவற்றிற்கு மேலும் இருக்கலாம். இவர்கள் ஊர்ப் பெருமக்களின் நிலங்களில் உழவுத்தொழில் செய்வர். இத்தெருவின் தொடர்ச்சி ஏரிப்பாசனம் உள்ள வயலில் போய் முடிகின்றது. (இப்போது இந்த வயலின் குறுக்கே சாலை அமைக்கப்பெற்றுத் துறையூர்-கோட்டாத் தூர்-புத்தனாம் பட்டி-ஒமாந்துார் வழியாகச் செல்லும் பேருந்துகள் செல்கின்றன). வயலின் தென்கோடியில் ஒரு பிடாரிக் கோயில் உள்ளது. இதில் நாடோறும் ஒரு முறை வழிபாடு நடக்கும். உள்ளூர்ப் பண்டாரம்தான் இதற்குப் பொறுப்பாளர். வடக்கு-தெற்காகவுள்ள மேற்குத் தெருவின் தென்கோடியில் அம்பலக்காரர், மூங்கில் தட்டி பின்னும் குறவர்கள் வாழ்கின்றனர். தெற்குத் தெருவில் தான் மளிகைக் கடை, துணிக்கடை இவை உள்ளன. இத் தெருவிலிருந்துதான் இரட்டை மாட்டு வண்டிகளில் தானியங்கள், வெல்லம், பருத்தி, மிளகாய், எலுமிச்சைபழம்