பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll கோட்டாத்தூரில்-தொடக்கநிலைப்பள்ளி வாழ்வில் குமிழி-8 8. சொந்த ஊர் வாசம் கோட்டாத்தூர் என் தந்தையார் பிறந்த ஊர். இது தான் என் சொந்த ஊர். இந்த ஊரைப்பற்றியும் சிறிது கூறுவேன். பெரகம்பியை விடச் சற்று பெரிய ஊர். சற்று நாகரிகத்திலும் சிறந்த ஊராகத் திகழ்ந்தது. கிழக்கு மேற்காக மூன்று வீதிகள். இவற்றைக் குறுக்கே வெட்டுகின்ற போக்கில் தென்வடலாக மூன்று தெருக்கள். இவற்றைத் தவிர வீதிகளிடையே குறுக்கு வழிகளாக அமைந்த பல சந்துகள். கிழக்கு மேற்காக உள்ள நடுவீதியின் மேல் கோடி யில் ஓர் அழகிய பிள்ளையார் கோயில் உள்ளுர்ப் பண்டாரம் ஒருவர் இரண்டு வேளை வழிபாடு செய்வார். இதற்கும் மேற்கே ஒரு சாவடி, கிராம முனிசிப்பு வீடு. அதிகாலையில் திருக்கோயிலுக்கு முன்நின்று சங்கொலி எழுப்புவார் பண்டாரம்.கீழ்க்கோடியில் கழகத் தொடக்கப்பள்ளி. கிழக்கு மேற்காக உள்ள வடக்குத் தெருவின் கீழ்க்கோடியில் ஈசுவரன் கோயில். குருக்கள் ஒருவர் இரண்டு வேளை வழிபாடுகட்கு வசதிகள் செய்து தருவார்; தாமும் வழிபாடு நடத்துவார். இத்தெருவின் மேல்கோடியில் ஒட்டர், நாவிதர், வண்ணார் வாழ்கின்றனர். தெருவின் நடுவில் வடபுறத்தில் துலுக்கர், குறும்பர் வாழ்கின்றனர். தென்வடலாகவுள்ள கிழக்குத் -5–