பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நினைவுக் குமிழிகள்-1 தன் பாட்டி வீட்டில் வாழ்ந்து வந்தவர், கீரம்பூருக்கே, தன் சொந்த ஊருக்கே, போய் விட்டார். ஏனையோர் இன்றும் கோட்டாத்துரிலேயே வாழ்ந்து வருகின்றனர். கோட்டாத்துரில் என் பக்கத்து வீட்டுப் பெண் மேலே குறிப்பிட்ட செல்லப் பாப்பா கழகப் பள்ளியில் என்னுடன் கீழ் வகுப்பில் பயின்றாள். என் அன்னையாரும் இவள் அன்னையாரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் செல்ல பாப்பாவை எனக்குத் திருமணம் செய்து வைப்பது என்று அடிக்கடிப் பேசிக் கொள்வதைக் கேட்டதுண்டு. அப்பேச்சுகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. என் அம்மான் மகளுக்கு அடுத்த செல்லபாப்பா இந்தப் பெண். விளையாட்டுப் பையனாக இருந்தபோது இந்தத் திருமணப் பேச்சு என் சிந்தனையில் ஏறவில்லை. திருமணங்கள் உம்பருலகில் உறுதிப் படுகின்றன என்ற பொன் மொழியைக் கேட்கும் வயது வந்த பிறகு திருமணம் அவரவர் ஊழின்படி நடைபெறும் என்ற நம்பிக்கை வேரூன்றி விட்டது. பல்லாண்டுகள் திருமணம் பற்றிய சிந்தனையின்றியே என் கல்வி வாழ்க்கை நடைபெற்று வந்தது.