பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை வாழ்க்கையில் திருப்பம் 63 பெரகம்பி நண்பர்களில் வரகுப்பாடி சிருஷ்ணசாமியும் மொட்டை ரெட்டியார் வீட்டு ரங்கசாமியும் பாம்பு கடித்து இறந்தார்கள். இவர்களைத் தவிர வேட்டகுடித்தம்பு என்ற பணக்காரர் ஒருவரும் வேறு சிலரும் பாம்பு கடித்தே மரித்தனர் என்ற செய்தியும் எனக்கு எட்டியது. இந்த நிகழ்ச்சிகள் அடிக்கடி என் கனவில் வரும். எனக்கும் பாம்புக் கடி இருக்குமோ என்று அஞ்சி விழித்துக் கொள்வேன். இப்போதெல்லாம் இத்தகைய கனவுகளால் அதிர்ச்சியடைவ தில்லை. வைணவம் என் குருதியோடு கலந்து விட்டமை யால் ஆதிசேஷன் என்னை ஒன்றும் செய்யான் என்ற நம்பிக்கையும், அப்படி ஏதாவது செய்தாலும் பெரிய திருவடி (கருடன்) என்னைக் காப்பான் என்ற நம்பிக்கையும் ஆழமாக ஏற்பட்டு விட்டதால் அச்சம் போய் விட்டது. கோட்டாத்துரரில் நான்கு ஆண்டுகள் கழகத் தொடக்கப் பள்ளியிலும், சாமுவேல் பிள்ளை என்பவரால் நடத்தப்பெற்ற ஆங்கிலப் பள்ளியிலும் படித்தபோது அதிகமான நண்பர்கள் ஏற்படவில்லை. இருந்த போதிலும் குறிப்பிடத் தக்கவர்கள் ராமுடு, சுப்பு அய்யர், சிதம்பரம், கீரம்பூர் இராசகோபால், கணபதி, பெ. அரங்கசாமி, கிருஷ்ணசாமி, இராசமாணிக்கம் மோர்சு ரெட்டியார் வீட்டு துரைசாமி, நாராயணசாமி, கங்காணியார் வீட்டு சோமசுந்தரம், வி ரு த் த | ச ல ரெட்டியார் வீட்டு இராமசாமி, குஞ்சு பிள்ளை, பெண் பிள்ளைகளில் செல்ல பாப்பா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர் கள். இவர்களில் ராமுடு சுப்பு அய்யர், பெ. அரங்கசாமி நாராயணசாமி இவர்கள் காலகதி அடைந்து விட்டனர். இராசமாணிக்கம் எங்கோ சென்று வியாபாரம் செய்கிற தாகக் கேள்வி. குஞ்சு பிள்ளை மேலுர் வட்டத்தில் (மதுரை வட்டம்) ஏதோ ஊரில் திருமணம் ஆகி மாமனார் வீட்டிற்கே போய் விட்டார். துரைசாமி பெரம்பலூர் வட்டத்தில் ஏதோ ஊரில் குடியேறி விட்டார். கீரம்பூர் இராசகோபால்