பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நினைவுக் குமிழிகள்-1 முத்து ஆகியோர் குறிப்பிடத்தக்க வகுப்புத் தோழர்கள் பெண் பிள்ளைகளில் தனலட்சுமி, செல்லம்மாள், பெரிய காமாட்சி, சின்ன காமாட்சி இவர்கள் குறிப்பிடத்தக்க வகுப்புத் தோழியர்கள். இவர்களில் பெரும்பாலோர். காலகதி அடைந்து விட்டனர். பூசாரி வீட்டு இராமசாமி, செல்லமுத்து, கோபால், அங்கசாமி, பெரிய காமாட்சி, சின்ன காமாட்சி ஆகியோர் மட்டிலும் இன்னும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிகின்றேன். சில ஆண்டுகட்கு முன்னர் ஒய்வு பெற்றுச் சென்னையில் குடியேறி கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தபொழுது போஜன் என்பவர் துறவுக் கோலத்தில் சென்னைப் பல்கலைக் கழகக் கட்டடத்தில் என் அலுவலகத்தில் வந்து சந்தித்தார்; அவருடன் இன்னொரு துறவியும் வந்தார். நான் தலைமைப் பதிப்பாசிரியராக நியமிக்கப் பெற்றதைச் செய்தித் தாள்களில் பார்த்ததாகவும, அதனால் தாம்பெற்ற மகிழ்ச்சியை நேரில் தெரிவிப்பதற்கு வந்ததாகவும் தெரிவித்தார்கள். அதனை ஆசியாக நினைந்து மகிழ்ந்தேன். சிற்றுண்டி, காஃபி வழங்கி இருவரையும் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு சில திங்கள் கழித்து வாரணாசியிலிருந்து போஜன் கடிதம் எழுதினார். இப்போது அவர் இருக்கும் இடம் அறியக் கூடவில்லை. போஜன் என் வகுப்புத் தோழனாக இருக்கும்பொழுது நாவிதர், உடையார், வண்ணார் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தன்னை போஜன் என்று அழைக்கக்கூடாது என்றும் ‘போஜர் என்றே அழைக்க வேண்டும் என்றும் வற்புறுத் தியைக் கேட்டு அன்றும் சிரித்தேன்; அதை நினைக்கும்போது இன்றும் சிரிப்பு வருகின்றது. அந்தச் சிறுவயதிலேயே 'தன் முனைப்பு சாதி ஆணவம் ஆட்கொள்வதை நினைந்து பார்க்க முடிகின்றது.