பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை வாழ்க்கையில் திருப்பம் 61 கலங்கினார்கள். அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந் திருந்தால் என் மேல்படிப்பு பாழடைந்திருக்கும். மேற் படிப்பு படிக்கும் ஊழ் எனக்கு இருந்ததால் என் பாட்டியார் நான்கு ஆண்டு காலத்திற்குள் காலகதி அடைந்து விட்டார்கள். என் தாய்மாமனுக்குக் குழந்தையுள்ளம். ஓரிரண்டு ஆண்டுக்குள் எங்கள் மீது என் தாய்மாமனின் அன்பும் பாசமும் துளிர்விடத் தொடங்கின. பெரகம்பியிலிருந்து துறையூர் என்ற சிறு நகரத்திற்குப் போகும்போது கோட்டாத்துாருக்குப் வராமல் நேர் வழியில் போய்விடுவார். திரும்பும்போது துறையூரில் ஒரு கோமுட்டி செட்டியார் சிறந்த முறையில் தயாரிக்கும் நெய் (வெண்ணெய்) பிசுகோத்தை வாங்கி வந்து என்னிடம் தந்து விட்டுப் போவார். நாளடைவில் விரோதம் குறைந்துவிட்டது. என் பாட்டியார் மறைவுக்கு வந்து சேர்ந்தார் தனியாக. பதினைந்தாம் நாள் காரியம் பெரகம்பியில் தன் இல்லத்தில் நடத்தினார். நானும் என் தாயாரும் அதற்குப் போயிருந் தோம். அதன்பிறகு பெரகம்பிக்குப் போகும் வேலையே இல்லை. என் கவனம் எல்லாம் உயர்படிப்பிலேயே சென்று விட்டது. பெரகம்பியில் வகுப்புத் தோழர்களாகவும் ஆருயிர் நண்பர்களாகவும் இருந்தோர் இப்போது நினைவுக் ) வருகின்றார்கள். கோட்டத்துார் நாராயணன், கீச்சி ரெட்டியார் வீட்டுக் கிருஷ்ணசாமி, வேங்கடாசலம், அரங்க சாமி, கோபால்; வரகுபாடி வீட்டுக் கிருஷ்ணசாமி, மூக்கன் என்று செல்லமாக அழைக்கப்படும் அரங்கசாமி, கோபால் ஆகிய சகோதரர்கள். போஜன், பூசாரி ரெட்டியார் வீட்டுக் கிருஷ்ணசாமி, அவர் தம்பி இராமசாமி, கப்பாடி துரைசாமி பாபுரெட்டி, மொட்டை ரெட்டியார் வீட்டு ரங்கசாமி, செல்ல