பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நினைவுக் குமிழிகள்-1 இளம் மனைவியின் உறவு என் தாய்மாமன் என் மீது காட்டிய அன்பு, பாசம் இவற்றையெல்லாம் மறைத்திருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகின்றது. கோட்டத்துரர் வரும்போது என் கைகளில் தங்கக் காப்பும் தங்கக் கொலுகம் இருந்தன. இவை பன்னிரண்டு சவரன்கள். இதற்குமுன் பன்னிரண்டு சவரன் மதிப்புள்ள தங்க அரைஞாண் கட்டியிருந்தேன். அது எப்படியோ களவு போய்விட்டது. பெரகம்பிக்கு அருகிலிருக்கும் தேனூரைச் சார்ந்த துார உறவு உள்ள ஒரு பாட்டிதான் களவு செய்தார் கள் என்பதை என் பாட்டியாரும் அன்னையாரும் பேசிக் கொண்டதை இப்போது நினைவு கூர்கின்றேன். அதன் பிறகு அந்தத் தேனூர்ப் பாட்டியின் உறவு அறுந்தே போயிற்று. குற்றமுள்ள மனம், சாடையாகப் பேசும் எங்கள் வீட்டுப் பேச்சு ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். என் தாய்மாமன் திருமணத்திற்கு வேண்டுமென்று பதினெட்டு சவரன்களை என் தாயார் வாங்கித் தந்திருந் தார்கள். அந்தக் காலத்தில் ஒரு சவரன் விலை ரூ 13/அல்லது ரூ 13.50 ஆக இருந்தது. புதிதாகப் புகுந்த அம்மையாரால் விளைவிக்கப்பெற்ற கசப்பை அறிந்ததும் என் பாட்டியார் பதினெட்டு சவரன்களையும் என் தாயா ரிடம் எடுத்துத் தந்து விட்டார்கள். இதனால் என் பாட்டி தன் மகள் வீட்டைப் புகலிடமாக அடை வேண்டிய தாயிற்று. சுமார் நான்கு ஆண்டு காலம் கோட்டாத்துரில் என் வீட்டில் வாழ்ந்தார்கள் என் பாட்டியார். என் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள். என் தாய்மாமனின் பிரிவு இவர்களுடைய அன்பை மேலும் பெருக்கி விட்டது. நான் வெளியூருக்கு உயர் கல்விப் பெறப் போகவேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்த பொழுதெல்லாம் கண்