பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை வாழ்க்கையில் திருப்பம் 59 நூல்களைப் படித்து அதனால் பெற்ற உயர் கருத்துகளின் அநுபவம், அக்காலத்தில் பாலர் பள்ளி முதல் உயர் நிலைப் பள்ளி வரையில் மாணாக்கர்களின் செயல்களை நேரில் கண்டதால் பெற்ற அநுபவம் ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த வியப்பினை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. குமிழி -7 7. இளமை வாழ்க்கையில் திருப்பம் 6Teir அம்மான் மனைவியை இழந்தார். ஏதோ நோய் வாய்ப் பட்டு அவர்கள் கால கதியை அடைந்து விட்டார்கள். அவர்களின் ஒரே குழந்தை - செல்லபாப்பா - தாயைப்பெற்ற தன் பாட்டியார் வீட்டில் வளர்ந்து வரலானாள். என் தாய் மாமன் மறு மணம் செய்து கொண்டார். பண்ணையார் வீட்டுக் குடும்பத்தில் புயல் எழும்பத் தொடங்கியது. என் பள்ளி வாழ்க்கையிலும் பெருத்த மாற்றம் நிகழ்ந்தது. திருமணம் ஆகி ஒன்றிரண்டு திங்களில் நானும், என் தாயைப் பெற்ற பாட்டியாரும் வீட்டைவிட்டு விரட்டப்பெற்றோம் என்று சொல்லும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக விரைவாக நடைபெற்றன. இவற்றையெல்லாம் விரிவாக விளக்கத் தேவையில்லை. எல்லாக் குடும்பங்களிலும் சாதாரணமாக நடைபெறுபவையே. எனக்கு அருமையாகக் கற்பித்த ஆசிரியரையும், பால் நினைந்துTட்டும் தாயினும் சாலப் பரிந்து வளர்த்த' என் தாய்மாமனையும் விட்டுப் பிரியும்போது என் கண்களில் நீர் தாரை தாரையாக வழித் தோடினதை இப்போது நினைந்து பார்க்கிறேன். என் அம்மானின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அந்த வயதில் என்னால் கணித்துப் பார்க்க இயலாது போயினும்,