பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நினைவுக் குமிழிகள்-1 துவாரம் வழி யாக தண்ணிர் தாரையாகப் பீச்சப்படும். இதை கொண்டுதான் வழுக்கு மரம் ஏறுபவன் மீது சிறுவர் கள் நீரைப் பீச்சுவார்கள். உருவம் அமைத்தல் : களிமண்ணைக் கொண்டு பிள்ளை யார் உருவம் அமைத்தலை முன்னர் எழுந்த குமிழி யொன்றில் குறிப்பிட்டேன். அதைத் தொடர்ந்து உருவ' அமைத்தல் நடைபெறும். பெரும்பாலும் இதற்கு ஆலம் பிசினைப் பயன் படுத்துவோம். ஏரிக் கரையிள் முகப்பில் ஒரு சிறிய ஆலமரம் இருந்தது. சிறுவ னாகிய என்னால் அதில் ஏற முடிந்தது. அதில் பல இடங்களில் கூரான கல்லால் கொத்திவிட்டால் பால் வடிந்து ஒரு வாரத்தில் பிசின் கிடைக்கும். அதைச் சேகரித்து வைத்துக் கொண்டு சிவலிங்கம், பிள்ளையார், வாத்து, குருவி, காக்கை, நாய் முதலிய உருவங்களை அமைத்து மகிழ்வேன். கிட்டத்தட்ட நான் அமைக்கும் உருவங்கள் அந்தந்த மூல உருவங்கள் போலவே இருக்கும். இக்காலத்தில் பாலர் பள்ளிகளில் (Nursery School) வெள்ளைக் களிமண், பாரிஸ்காரை முதலியவற்றைக் கொண்டு சிறுவர்.சிறுமிகளிடம் உருவம் அமைக் கும் பயிற்சி யைத் தருகின்றனர் அல்லவா? இத்தகைய ப்யிற்சிக்கு வழி கோலினவர் எங்கள் ஆசிரியர் இலிங்கச் செட்டியார் என்று கூறினால் அஃது எள்ளளவும் மிகையன்று. இதனால் கைவண்ணப் பயிற்சியும் கற்பனையாற்றலும் சேர்ந்து சிறுவர் களிடம் படைப்பாற்றல் வளரும் என்று இக்கால உளவியல் அறிஞர்கள் கூறும் தத்துவம் இலிங்கச் செட்டியாரின் திருவுள்ளத்தில் உதித்ததை நினைந்து நினைந்து வியப்படை கின்றேன். அதுவும் பத்தாண்டுகள் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாக இருந்து சிறுவர்களைக் கவனித்துப் பெற்ற அநுபவம், பத்து ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றும்போது பல மேனாட்டுக் கற்பிக்கும் முறைகள், கல்வி உளவியல் ஆகிய