பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் சிறுவயது விளையாட்டுகள் 57 வைத்து தலையைச் சுற்றி வருமாறு கைகளால் பெருவட்ட மாகச் சுற்றினால் அற்புதமாக பொறியும் பொறி வட்டங் களைக் கண்டு மகிழலாம். துணிப் பைகளுக்குப் பதிலாக பீர்க்கம் நெற்றைப் பயன் படுத்தலாம். காம்புப் பக்கம் ஒட்டை உண்டாக்கி விதைகளை நீக்க வேண்டும். நெற்றை நையப் புடைத்து மேற்பக்கை நீக்கி வலைப் பகுதியில் (இது மூன்று அறைகளாக இருக்கும்) கரி-உமி-உப்புக் கலவைகளை நிரப்பிக் கொண்டு பயன் படுத்தலாம். வலைப்பகுதி நன்கு பொறிவதற்குத் துணையாக அமையும். பதிர் உமி இவற்றிற்குப் பதிலாகப் பனம் பூவைப் பொடியாக்கிப் பயன் படுத்தப் பெறுவதும் உண்டு. இக்கலவை மிக நன்றாகப் பொறியும். கார்த்திகை மாதம் கார்த்திகையன்று நடை பெறும் விளையாட்டு இது. கார்த்திகை விளக்கு வருவ தற்கு ஒருவாரத்திற்கு முன்பிருந்தே ஆயத்தம் தொடங்கி விடும். பீச்சுக்குழல் விளையாட்டை வழுக்கு மரம் பற்றிக் கூறும் போது குறிப்பிட்டேன். இரண்டு அல்லது மூன்றங் குலம் குறுக்களவுள்ள மூங்கில் குழாய் இதற்குத்தேவை; ஒரு கணு போதுமானது, ஒரு பக்கம் கணு அடைப்பு முழுவதை யும் நீங்குதல் வேண்டும்; மறுபக்கமுள்ள ஒரு சிறு துவாரம் செய்து கொள்ள வேண்டும். கெட்டியான மூக்கில் பிளப்பு அல்லது வேறு கெட்டியான கோலில் பழைய கந்தல்களைப் பொருத்தி அதனை மூங்கில் குழாயில் செருகுதல் வேண்டும். இது கெட்டியாக மேலும் கீழும் நகரும்போது ஓர் அழகிய பீச்சுக் குழாயாகிவிடும். தண்ணிரில் இக்குழலை வைத்து கோலை இழுத்தால் தண்ணீர் குழாயில் ஒட்டை வழி யாகச் சென்று நிரம்பும். பிறகு கோலை அழுத்தினால்