பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவுக் குமிழிகள்-1 வீழ்த்தப் பெற்றபிறகு நரியனார் கோனாராகவும் கோனார் நரியனராகவும் மாறி விளையாடுவார்கள். இந்த விளை யாட்டு அனைவருக்கும் உற்சாகத்தைத் தரும். கால்துக்கும் கணக்கப்பிள்ைைள: இஃது இன்னொரு விளை யாட்டாகும். ஒருவர் கை விரல்களுடன் மற்றொருவர் கை விரல்களைக் கோத்துக் கொண்டு இருவர் இணைந்து நிற்பர். மூன்றாமவன் தனது ஒரு முழங்காலை விரல்களின் இணைப்பில் ஊன்றிக் கொண்டும் தமது இரு கைகளையும் இருவர் தோள்களில் போட்டுக் கொண்டும் அமைவான். இவனது மற்றொரு காலை நான்காமவன் துரக்கிப் பிடித்துக் கொள்வான். இவன்தான் கால் துரக்கும் கணக்கப்பிள்ளை', முதல் இருவரும் கால் தூக்குகிற கணக்குப் பிள்ளைக்கு மாதம் பத்து ரூபா என்று சொல்லிக் கொண்டே நடந்து செல்வர். இந்த விளையாட்டு சிறுவர்களை மாற்றிக் கொண்டு தொடர்ந்து நடைபெறும். இந்த விளையாட்டும் முன்னிரவில் நிலவு ஒளியில்தான் நடைபெறும். தீபாவளியன்று பட்டாசு, மத்தாப்புக் கொளுத்துவது போல் கார்த்திகையன்று, நாங்களே தயாரித்த கார்த்திப் பையைச் சுற்றுவோம்; பொறி பொறியாகப் பொறிவதைக் கண்டு மகிழ்வார்கள் பெரியவர்கள். ஒரு சாண் நீளமும் நாலு அங்குல அகலமும் உள்ள பழைய துணியைக் கொண்டு துணிப் பைகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். அடுப்புக் கரியைத் தூளாக்கி அதில் நெற்பதிர், வரகுஉமி இவற்றை அளவாகக் கலந்து பைகளை நிரப்புதல் வேண்டும். உப்பைப் பொடியாக்கி அதில் கலந்து கொண்டால் பொறியும் போது சிறுசிறு ஒலியுண்டாகிப் பொறிவதைப் பொலி வாக்கும். இந்தப் பைகளை மூன்று கவடுகளாலான அலரிக் குச்சியில் இடுக்கி விழாமல் செய்து கொள்ளவேண்டும். இதை நாலு முழக் கயிற்றில் நீட்டிக் கொள்ள வேண்டும் பிறகு பையில் கனன்று கொண்டிருக்கும் கரிநெருப்பை