பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் சிறுவயது விளையாட்டுகள் 55 வரை ஒருவரே ஆடிக் கொண்டிருக்கலாம். தவறும்போது அடுத்த சிறுவன் வீழ்த்தத் தொடங்குவான். ஒவ்வொருவரும் தமக்கெனப் பந்துகளை வைத்துக் கொண்டிருப்பர். பந்து தயாரிப்பதில் நான் தனித் திறமையை வளர்த்துக் கொண் டிருந்ததால், பந்து தயாரிக்கப் பலர் என்னை நாடுவார்கள். நான் பலருக்கு இதில் உதவுவேன். ஆட்டைப் பிடிப்பேன் கோனாரே இதைத்தவிர ஆட்டைப் பிடிப்பேன் கோனாரே என்ற விளையாட்டு ஒன்று இரவில் நிலவு ஒளியில் விளையாடுவது உண்டு. ஒருவன் இடையன் (கோனார்). அவனது இடுப்பு அரைஞாண். கயிற்று அல்லது இடுப்பு வேட்டியின் பின் விளிம்பைப் பற்றிக் கொண்டு பத்துப் பன்னிரண்டு சிறுவர்கள் ஒருவர்பின் ஒருவ ராக வரிசையாக நிற்பர். முதலில் நிற்பவன் திடமானவனாக இருப்பான். அதே மாதிரி திடமான மற்றொருவன் அவனுக்கு முன்னால் நிற்பான். இவன் தான் நரியனார். இவன் ஆட்டைப் பிடிப்பேன் கோனாரே என்று சொல்லிக் கொண்டு வரிசையின் இறுதியிலுள்ள சிறுவனைத் தொட முயல்வான்; சுற்றிச் சுற்றி ஒடுவான். வரிசையின் முன்னால் இருப்பவன் ஏன் பிடிப்பாய் நரியனாரே என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்தவண்ணம் அவனை மறிப்பான். இவனுக்குப் பின்னால் வரிசையாக இருப்பவர் கள் "ஆடுகள்', இவர்கள் பக்கவாட்டில் அசைந்து ஒடிக் கொண்டு நரியனாருக்கு அகப்படாமல் இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் உயரத்தையொட்டி வரிசையாக நிறுத்தப் பெற்றிருப்பார்கள். இறுதியில் இருப்பவன் மிகச் சிறியவனாக இருப்பான். ஆட்டம் விறுவிறுப்பாகச் சூடு பிடிக்கும்போது நரியனார் கோனாரையும் மீறி ஒவ்வொரு ஆடுகளாக வீழ்த்துவான் (தொடுவான்). எல்லா ஆடுகளும்