பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நினைவுக் குமிழிகள்-1 வெளியில் வரும், கோட்டுக்குள்ளிருக்கும் பம்பரங்கள் வெளி வரும் வரை ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். எல்லாம் வெளியில் வந்தவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கும். ஏழெட்டுச் சிறுவர்கள் சேர்ந்து இந்த ஆட்டம் ஆடுவார்கள். பிள்ளையார் பந்து விளையாட்டு மிகவும் உற்சாக மானது. ஒரு செங்கல் அல்லது நிற்கக் கூடிய கருங்கல் சிராய் ஒன்று இவ்விளையாட்டுக்குத் தேவையானது. இக்காலத்தில் எளிதாகக் கிடைக்கும் பழைய டென்னிஸ் பந்தை அக் காலத்தில் சிற்றுார்களில் நினைத்துப் பார்க்கவும் முடியாது. ஆதலால் இப்பந்தை சிறுவர்களாகிய நாங்களே தயார் செய்து கொள்வோம். பழைய கந்தல்களை உருட்டி வைத்து அதன்மீது ரிப்பன்போல் கிழித்த கெட்டித் துணியை குறுக்கும் நெடுக்குமாகப் போர்த்திக் கெட்டியான உருண்டை யாகச் செய்து கொள்வோம். கந்தலுக்குப் பதிலாக கொட்டையுடன் கூடிய பருத்தியைப் பயன்படுத்தலாம். பந்து இலேசாகவும், மெதுவாகவும் இருக்க வேண்டுமானால் கொட்டை நீக்கிய பஞ்சைப் பயன்படுத்துதல் வேண்டும். இரண்டிலும் ரிப்பன்போல் கிழித்த துணியைப் பயன் படுத்துதல் வேண்டும். பழைய கிழிந்த சமுக்காளத்தில் பாவாக (நெடுக்காக) உள்ள நூல் கெட்டியாக இருக்கும். அதை முப்பட்டை ஊசியில் கோத்து உருண்டையான துணிப் பந்தின்மீது அழகாகப் பின்ன வேண்டும். முதலில் ஒரு பாதி யையும் பின்னர் அடுத்த பாதியையும் பின்னுதல் வேண்டும். இப்படிப் பின்னப்பட்ட பந்து நீண்டநாள் நன்றாக உழைக்கும். மேலே குறிப்பிட்ட செங்கல், அல்லது கருங்கல் லாலான சிராயை நிறுத்தி வைத்து ஒரு குறிப்பிட்ட அளவு தொலைவில் நின்று கொண்டு பந்தினால் பிள்ளையாரை வீழ்த்த வேண்டும். செங்கல் உடையுமாதலால் கருங்கல் சிராயே இவ்விளையாட்டிற்கு மிகவும் உகந்தது. வீழ்த்தும்