பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் சிறுவயது விளையாட்டுகள் 53 தேர்த்திருவிழாவிலும், பங்குனி மாதம் மலைமீதுள்ள முருகப் பெருமானுக்கு நடைபெறும் உத்திரத் தேர்விழா விலும் கூட கண்ணாடிக் குண்டுகள் கிடைப்பதில்லை. சுண்ணாம்பு மாவாலான குண்டுகளைக் கொண்டே கோலிக் குண்டு ஆட்டம் நடைபெற்று வந்தது. இதில் நான் உற்சாக மாக ஆடினேன் என்று சொல்லமுடியாது. கிட்டிப்புள் விளையாட்டில் மிகவும் உற்சாகம் காட்டி னேன். மிகத் தொலைவில் கிட்டிப்புள்ளை அடித்து அனுப்பு வதில் பெருமகிழ்ச்சி கொள்வேன். இந்த விளையாட்டில் அடிக்கும் கோல் எந்த மரத்தாலானாலும் கெட்டிக்கோலாக இருந்தால் போதும், ஆனால் கிட்டிப்புள் மட்டிலும் காரைக் குச்சியாலானதாக இருந்தால் நலம் பயக்கும். இக்குச்சி மெல்லியதாகவும், உறுதியானதாகவும் சற்றுக் கனமான தாகவும் இருப்பதால் எளிதில் உடையாது; பிளந்து போகாது. அ டி க் கு ம் போ து வெகு தொலைவிற்கும் செல்லும். சிறுவர்களாகிய நாங்களே பக்கத்திலுள்ள காடு களில் அலைந்து திரிந்து இக்குச்சியைச் சேகரிப்போம். பம்பர விளையாட்டு என்ற ஒன்றை அக்காலத்தில் விளையாடுவோம். இக்காலத்தில் அங்காடிகளில் விற்கப் பெறும் வண்ணம் பூசிய கட்டைகளாலான பம்பரங்கள், அக் காலத்தில், அதுவும் சிற்றுார்களில், கிடைக்கா. உள்ளுர்த் தச்சர்களால் செய்யப்பெறும் உறுதியான மரக்கட்டை களாலான பம்பரங்கள்தாம் பயன்படுத்தப்பெறும். தரையில் ஒரு சிறுவட்டமான கோடு வரையப்பெறும். அந்தச் சிறு வட்டத்தில் முதலில் விழுமாறு பம்பரத்தை விடுவார்கள்.விட முடியாதவர்கள் தங்கள் பம்பரங்களை அந்தக் கோட்டிற்குள் வைத்துவிட வேண்டும். விட முடிந்தவர்கள் கோட்டுக் குள்ளிருக்கும் பம்பரங்களைக் கு த் து மாறு தங்கள் பம்பரங்களை விடுவார்கள். அவை குத்துப்பட்டு கோட்டுக்கு