பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நினைவுக் குமிழிகள்-1 நன்றாக நீந்தக் கற்றுக் கொண்ட பிறகு அதிகமாக நீராடுவது பூங்கேணியில்தான். முதலில் திட்டிலிருந்து குதிப்பேன். நாளடைவில் கபிலை ஏற்றத்தினருகிலிருந்து குதிப்பேன். சில சிறுவர்கள் கபிலை ஏற்றத்தின் மேலேறிக் குதிப்பதுண்டு. அக்காலத்தில் அந்தச் சிறுவயதில் எனக்கு அந்தத் துணிச்சல் வரவில்லை; அதனால் அப்படிக் குதிப்ப தில்லை. நாளடைவில் திட்டிலிருந்து தலைகீழாகப் பாயும் பழக்கம் கைவரப் பெற்றது. நாளடைவில் தண்ணிரில் மல்லாந்து அசையாது இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இப்படி எத்தனையோ விளையாட்டுகள். ஏழு அல்லது எட்டு வயதிற்குள், நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை' என்று புறநானூற்றுப் புலவர் கூறுவதுபோல் இந்த விளை யாட்டெல்லாம் நடைபெற்றன. ஏழு, அல்லது எட்டு வயதில் நான் விளையாடின விளையாட்டுகளுள் குறிப்பிடத் தக்கவை கோலிகுண்டு விளையாட்டு, கிட்டிப்புள் விளையாட்டு, பம்பர விளையாட்டு, கார்த்தி சுற்றுதல், பீச்சுக்குழல் விளையாட்டு உருவங்கள் அமைத்தல் முதலியவையாகும். கோலி விளையாட்டு இப்பொழுது சிறுவர்கள் எப்படி எப்படியோ விளையாடு கின்றனர். நான் எப்படி விளையாடினேன் என்பது இப்போது நினைவிலில்லை. மாவாலான வண்ணக் கோடு களிட்ட குண்டுகள்தாம் அன்று கிடைக்கும். இன்று எங்கும் கிடைக்கும் கண்ணாடியாலான குண்டுகளை அன்று நான் பார்த்ததே இல்லை. சுமார் மூன்று கல் தொலைவிலுள்ள செட்டிக்குளம் என்ற ஊரில் சிவன் கோயிலில் தைப்பூசத் 18. புறம்-243