பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் சிறுவயது விளையாட்டுகள் 51 பாடல்களும் வாதப்பிரதிவாதப் பாடல்களும் கேட்போருக்கு மகிழ்ச்சி விளைவிக்கும். விடியும்வரை இந்த நிகழ்ச்சிகளை உறக்கமின்றிக் கேட்டு மகிழ்வார்கள் ஊர் பெருமக்கள். இந்த விழாவை நான் என் பாட்டி மடியிலிருந்து கொண்டு அரைகுறைத் தூக்கத்துடன் கேட்டு மகிழ்ந்ததை இப்போது நினைவு கூாகின்றேன். இந்தக் கதையையும் பாடல்களையும் புரிந்து கொள்ளும் வயது அப்போது எனக்கு இல்லை யாயினும், ஏதோ பார்த்தவரையில் காட்சிகள் மட்டிலும் நினைவுக்கு வருகின்றன. இவை அரைகுறையாக எழும் குமிழிகளேயாகும் என்பதையும் தெரிவிக்கின்றேன். குமிழி-6 6. என் சிறுவயது விளையாட்டுகள் நீந்தக் கற்றேன். ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பும் முன்னே எனக்கு என் தாய்மாமன் நீந்தக் கற்றுக் கொடுத்து விட்டார். சுரைக் குடுக்கையை வலைப்பின்னலால் மூடி அதை முதுகுப் புறமாக இடுப்பில் கட்டி கிணற்றில் இறக்கி விடுவார். நான் காலையும் கையையும் எப்படி இயக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தருவார். சில நாட்கள் இப்படி நடைபெறும். அடுத்து இடுப்பளவுதண்ணீர் உள்ள கிணற்றில் சுரைக் குடுக்கையின்றி நீந்த விடுவார். இதில் தேர்ச்சி பெற்றதும் சற்று ஆழமாக நீர்உள்ள கிணறுகளில் இந்த நீச்சுப் பயிற்சி தொடரும். ஒன்றிரண்டு மாதங்களில் நன்றாக நீந்தக் கற்றுக் கொண்டேன். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டுச் சிறுவர்கட்கும் பெற்றோர்களால் இந்த நீச்சுப்பயிற்சி தரப்பெறும். சிற்றுார்களில் அக்காலத்தில் நீந்தத் தெரியாத சிறுவர்களே இரார்.