பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய முறைக் கல்வி 103 கொற்றவனோடு எதிர்மாறு பேசவேண்டாம். வெஞ்சமரில் புறங்கொடுத்து மீளவேண்டாம். பொருவார்தம் போர்க்களத்தில் போகவேண்டாம். இருதாரம் ஒருநாளும் தேடவேண்டாம். வாதாடி வழக்கு அழிவு சொல்லவேண்டாம். என்பவை இவர்தம் அநுபவத்திற்கு அப்பாற்பட்டவை இவண்குறிப்பிட்ட ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, உலகநீதி ஆகியநூல்களிலுள்ள பாடல்கள் யாவும் பெரகம்பியில் திண்ணைப்பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டு பால் முறைவைப்பிலேயே மனப்பாடம் ஆகிவிட்டன. வாக்குண்டாம். நல்வழி, நன்னெறி போன்ற நீதிநூல் பாடல்கள் தொடங்கப் பெற்ற சில மாதங்களில் கோட்டாத்துாரில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஒராண்டுதான் வேலூர் வாத்தியாரிடம் பயின்றதாக நினைவு. வாக்குண்டாம், நல்வழி, நன்னெறியிலுள்ள பாடல்களை யெல்லாம் வற்புறுத்திமனப்பாடம் செய்யும்படி செய்து விட்டார். பாடல்களின் பொருள்களை விளக்கிய பிறகுதான் மனப்பாடம் செய்யுமாறு பணித்தார். ஆழ அமுக்கி முகக்கினும், ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி:-தோழி! நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயன்' என்பனபோன ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பாலான வாக்குண்டாம் பாடல்கள் மாணாக்கர் அநுபவ நிலைக்கு ஏற்றவையே, நல்வழியிலும் பெரும்பாலான பாடல்கள் இவை கற்கும் வயதில் உள்ள சிறுவர்கள் அநுபவித்து மகிழக்கூடியனவ. 19. வாக்குண்டாம் 19