பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைவுக் குமிழிகள்-1 அம்மி துணையாக ஆறு இழிந்த வாறுஒக்கும், கொம்மை முலைபகர்வான் கொண்டாட்டம்; இம்மை மறுமைக்கும் நன்று அன்று: மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்துஆய் விடும்' என்பனபோன்ற ஒரு சில பாடல்களே சிறுவர்கள் உணர் வதற்கு அரியவை. கன்னெறியில் ஒரு சில பாடல்களே ஐந்தாம் வகுப்பு மாணாக்கர்கட்கு ஏற்றவை. பொய்ப்புலன்கள் ஐந்தும்நோய் புல்லியர்பால அன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்;-துப்பின் சுழற்றுங்கொல் கல்துணைச் சூறா வளிபோய்ச் சுழற்றும் சிறுபுன் துரும்பு’. என்பன போன்ற பல பாடல்கள் சிறுவர்களின் அறிவு. அநுபவங்கட்கு அப்பாற்பட்டவை. என்ற போதிலும் பழைய மரபை யொட்டிக் கற்பித்த ஆசிரியர்கள் இவற்றை யெல்லாம் மாணாக்கர்களிடம் மனப்பாடம் ஆக்குவதில் தவறுவதில்லை. இம்முறை புதிய முறைக் கல்வியின்படி உளவியல் கருத்துகளுக்கு ஒவ்வாதவை என்று இக்காலத்தார் குறை கூறுவர். பழங்கால ஆசிரியர்கள் குழந்தைகளின் மனநிலை, அறிவு வளர்ச்சி, மனவெழுச்சிகள், இயல்பூக்கங்கள் முதலியவற்றை அறியாதவர்கள் எனக் குற்றம் சாட்டுவர்; பொருத்திக் கற்பித்தல் (Correlation) இல்லாதது பெருங் குறையாக எடுத்துக் காட்டுவர். 20. நல்வழி-20 21. நன்னெறி-11