பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழையமுறைக் கல்வி 105 கிறைகள் : இக்கால முறைவல்லார் பண்டைய முறை களைக் குறை கூறுவது சிறிதும் பொருந்தாது. அக்காலக்கல்வி இக்காலக் கல்விபோல் வேலைதேடுவதற்காகக் கற்கும் கல்வி அன்று. படித்தல், எழுதுதல், கணக்கு இந்த மூன்றையும்" கற்றுக்கொண்டால் வாழ்க்கைக்குப் போதும் என்ற ஒரே நோக்க முடையவர்களாதலின், இந்த மூன்றிலேயே தம் கருத் தினைச் செலுத்தினர். இக்காலக் கல்வி ஏற்பாட்டில் உள்ள பொதுஅறிவியல், புவியியல், வரலாறு இயற்கணிதம், வடிவ கணிதம், வேதியியல் இயற்பியல், உயிரியல், தாவர இயல், விலங்கியல் போன்ற பாடங்கள் அக்காலக்கல்வி முறையில் இல்லாமையால் காலம் மீதமாய் இருந்தது. அவர்கள் இக்காலத்திற்கும் பிற்காலத்திற்கும்--ஏன்? மறுமைக்கும் கூடத்தான்-பயன் படக்கூடியவை என்று பளுவான கருத்துகளையுடைய இலக்கியத்தையும் கற்பித்தனர் என்பதை நாம் உளங்கொண்டால் பண்டைய முறைகளைக் குறைகூற வேண்டியதில்லை என்பது தெரியும். பண்டைய முறைகளில் நிறைகளே இல்லை என்றும் சொல்ல முடியாது. மனப்பாடம் செய்ததால் மாணாக் கர்கள் மொழித்திறம் பெற்றுத் திகழ்ந்தனர். மனப்பாடம் செய்த பகுதிகளின் சொல்லும் பொருளும் எப்போதும் உள்ளத்திலும் காதிலும் ஒலித்துக் கொண்டிருப்பதால், வேண்டுங்கால் அவற்றை நினைவுகூரலாம், அக்காலத்தில் மாணாக்கர் பெற்ற ஆழ்ந்த இலக்கண அறிவு, தாமாகவே பல இலக்கியங்களை நயமுணர்ந்து கற்கத் துணையாக இருந்தது. இன்னும் பல நன்மைகளைப் பன்னி உரைக்கின் 'பாரதமாக வளரும். 22, இக்காலக் கல்வியியலார் இவற்றை மூன்று R கள் (Three Rs) என்று வழங்குவர். ஆதாவது Reading Writing, Arithmetic sisi p (psi Asyu a-citar Rasi