பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி - 13 13. புதியமுறைக் கல்வி தொடக்கக் காலத்தில் பழைய முறைப்படி கற்ற நான் பிற்காலத்தில்-நான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்தபோது பல புதிய முறைகளை அறியும் வாய்ப்பு ஏற் பட்டது. ஒன்பதாண்டுகள் பல பாடங்களை உயர்நிலைப் பள்ளி மாணக்கர்கட் குக் கற்பித்தபிறகு பத்தாண்டுகள் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றிய போது இப்புதிய முறைகளைப்பற்றி மேலும் சிந்திக்கவும் இவற்றை எப்படி நடைமுறைப் படுத்தலாம் என்று எண்ணவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. புதிய முறைகட்கு வித்திட்ட பல மேனாட்டறிஞர்களின் சேவையும், அவர்கள் கொண்ட பல அடிப்படைக் கருத்துகளும் இந்தக் குமிழியில் எழுகின்றன. அவற்றை ஈண்டுக் காட்டுவேன். மேல் நாட்டில் மறுமலர்ச்சி காலத்திலிருந்து புதிய கல்விமுறை தொடங்கியது என்று கருதலாம். ஃபிரெஞ்சுப் புரட்சியுடன் பழைய முறைகள் மறைந்தன. ரூஸோ (1712-1779) . இந்த அறிஞரின் எமிலி என்ற நூல்தான் புதிய முறைகளின் வித்து எனலாம். ரூஸோவின் கல்விபற்றிய கருத்துகள் தெளிவாக இதில் காணப்பெறு கின்றன. இவர் கருத்துப்படி கல்வி என்பது மனிதனால் வளர்க்கப்பெற்ற செயற்கைமுறை நாகரிகத்திற்கு ஒரு குழந்தையை ஆயத்தம் செய்வது அன்று; ஆனால், குழந்தையின் இயல்பு மனிதனால் படைக்கப்பெற்ற சமூகத் தினால் பாதிக்கப்பெறாமல் பாதுகாக்கப்பெற வேண்டும் என்பது இவர் விருப்பம். "இயற்கை அன்னையிடமிருந்து வரும் எவையும் சிறந்து விளங்குகின்றன; ஆனால் அவை