பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியமுறைக் கல்வி 107 யனைத்தும் மனிதன் கைப்பட்டதும் சீரழிகின்றன’’ என்பது இவர் கொள்கை. இயற்கையன்னை ஈன்ற குழந்தையை மனிதன் படைத்த சமூகத்தில் பழக்கிக் கெடுக்கக் கூடாது என்பதும், கல்விபுகட்டுதலில் குழந்தை தான் முக்கியக்கூறு, மனிதன் வளர்த்த பண்பாடல்ல என்பதும் இவர் கருத்து. இதனால்தான் ரூஸோவைக் கல்விமுறையின் 'காபர்னிகஸ் என்று கூறுகின்றனர். பூமியை நடுவாக வைத்துத்தான் ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற பழைய கொள்கையை காபர்னிகஸ் மறுத்து, கதிரவனைத் நடுவாகக் கொண்டுதான் அவை இயங்குகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது போலவே, அதுகாறும் கல்வி ஏற்பாட்டினை (Curriculum) நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெற்ற முறையைத் தவறு எனக் கண்டித்து, குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெறல் வேண்டும் என்று கூறினார் ரூஸோ. "குழந்தையை நன்றாக ஆராய்க; குழந்தையை அறிவது எளிதல்ல, "குழந்தையைக் கவனி; இயற்கையோடு இணைந்துநட’’ என்பவை ரூஸோ கல்வித் துறையில் பணியாற்றுவோருக்குக் காட்டிய மாபெரும் உண்மைகள். இவர் கொள்கை உளவியல் உண்மைகளை ஒட்டியது. பெஸ்டலாஸ்ஸி (கி. பி. 1746-1827) : இவர் ஸ்விட்ஸர் லாந்து நாட்டு அறிஞர். ரூஸோவின் கல்விபற்றிய கருத்து களை வகுப்பறையில் பயன்படச் செய்தவர் இவர், இவர் குழந்தையை விதையாகக் கருதினார். விதைக்குள் எதிர் காலத்தில் பெரிய மரமாகும் ஆற்றல் சிறு வடிவில் உள்ளுறைந்திருப்பது போல (Latent) பிற்காலத்தில் வெளி வரவேண்டிய பேராற்றல்கள் குழந்தைகளிடம் உள்ளுறைந்து 23. ‘All things are good as they come out of the hands of their Creator but everything degene rates in the 'hands of man’—Emile or A Treatise of Education.