பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சை நெகிழ்விக்கும் பாடல்கள் 121 கணங்கள்மிகக் களித்தாடும் துழனி யாலும் கனற்பொறியின் மலிவாலும் புகையி னாலும் சுணங்குபல பிணங்குபெருங் குரைப்பி னாலும் தோகை அறிந் துணர்ந்து கொடுஞ் சுடலை சார்ந்தாள்.'" என்ற பாடலை மிக உருக்கமாகப் படித்துக் கற்பித்தது இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. சந்திரமதி தன் மைந்தன் உடலை ஓரிடத்தில் வைத்துவிட்டு எறிந்த குறைக்கட்டைகளைப் பல இடங்களிலும் ஒடித்தேடி ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டு வந்து சேர்த்துக் குவித்துத் தீமூட்டிப் பின் சவத்தை எடுத்து நெருப்பின்மேல் வைத்த காட்சியை பரண் மீதிருந்த அரிச்சந்திரன் கண்ணுறுகின்றான். தன் மைந்தன் என்றறியாமல் அப் பிள்ளையின் உடலைக் காலால் எற்றுகின்றான். சந்திரமதி தனக்குச் சுற்றமும் பொருளும் இல்லை என்று தன் குறையைக் கூறித் தன் மதலையைச் சுடக் கருணை செய்யு மாறு அவன் திருவடிகளே தஞ்சம் என்று அலறி வீழ்கின்றாள். அதற்கு அரிச்சந்திரன் தன் தலைவனுக்குக் "காற்பணமும் கொள்ளியான டயும் கொடுக்க வேண்டும். தனக்குரிய வாய்க்கரிசியை மட்டிலும் தரவேண்டா என்று கூறும் பாடலை மிக உருக்கமாகப் படித்துக் காட்டுவார் வேலூர் வாத்தியார். பொன்னனையாய் விடுவிடுயான் புலைய னென்னிற் புலையனும்அல் லேன்புலையற் கடிமை கண்டாய் என்னடிநீ தீண்டுவது தகாது நீதான் இப்பொருட்கியா னுரியனலேன் என்னை யாள்வோன் 35. மயா. காண்.35.