பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நினைவுக் குமிழிகள்- 1 என்ற பாடல் முதல் 12 பாடல்கள் உள்ளத்தை உருக்குபவை; அவலச்சுவை பீரிட்டு நிற்பவை. அவலத்தைக் கருணம் (அழுகை) என்பர் வடமொழிவாணர்கள். இங்கு நிலைத்து நிற்கும் மனோபாவம் துக்கமாகும். நிகழ்ச்சியை விளக்கும் கவிதைகளைப் படித்து அநுபவிக்கும்போது நமது உள்ளம் துக்க உணர்ச்சியால் பூரிக்கத் தொடங்குகின்றது. இப்போது ‘கருணரசம் பிறக்கின்றது. கருண ரசம் உலகின் அடிப்படை யான நிலையில் கிடக்கின்றது. ஆன்மாவும் உலகமும் பின்னிக் கிடப்பதாக அறிஞர்கள் கூறுவர். ஆன்மாவின் கூறு இன்பமாகவும் உலகின் பங்கு துன்பமாகவும் இருப்பதாகப் பெரியோர்கள் உணர்த்துவர். துன்பத்தில் இன்பத்தைக் காண்பது உலக வாயிலாக ஆன்மாவை உணர்வதாகும் ஆகவே, கருணரசத்தைச் சிறந்ததாகக் குறிப்பிடுவர் அறிஞர் கள். வால்மீகி பகவான் கிரெளஞ்சப் பறவைகள் இறந்ததைக் கண்டு மனம் துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்போது-உள்ளம் பூரித்திருக்கும்போது-கருணம் பிறந்ததாகவும், அப்போது தான் இராமாயணம் உதயமாயிற்று என்றும் சொல்வதுண்டு பவபூதி என்ற கவிஞர் உத்தர இராமாயணத்தில் இந்தக் கருண ரசத்தை நன்கு வளர்த்துக் காட்டியுள்ளதை வட மொழிவாணர்கள் பாராட்டிப் பேசுவதை நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந்ததுண்டு. இறந்த மகனைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற காட்சியும், சுடுகாட்டினைச் சில அறிகுறிகளால் அறிந்த செய்தியும் நெஞ்சை உருக்குபவை. சுடுகாடுபற்றிய அறிகுறி களை எடுத்துக் காட்டும், பிணங்கள் சுடும் கடும்புலையர் அரவத் தாலும் பிளந்து தலை வெடித்திடுபேரமலை யாலும் நிணங்கருகிச் சுடுநாறு மு டையி னாலும் நெடுங்கனலின் கொழுந் தெழுந்த நிவப்பி னாலும்