பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-15 15. நெஞ்சை நெகிழ்விக்கும் பாடல்கள் வேலூர் வாத்தியார் காசிக் காண்டத்தில் நெஞ்சை உருக்கும் சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி என்னை நெகிழ்விப்பார். சந்திரமதியையும் தேவதாசனையும் அந்தணன் ஒருவனுக்கு ஆவணம் வரைந்து விற்றல், இதனால் கோசிகன் கடன் தீர்த்தல், கடனை வாங்கவந்த சுக்கிரன் தனக்குக் கூலி கொடுக்குமாறு வேண்டும்போது வீரவாகு என்ற புலையனுக்குத் தன்னை விற்றுச் சுக்கிரன் கூலியையும் தருதல், காவலன் சுடலைகாக்கும் பணியில் ஈடுபடல் போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் கதையாகக் கூறிச்செல்வார். அவர் கதை கூறும் திறன் என் உள்ளத்தைக் குளிர்விக்கும். கதைகள் சிறுவர்கட்கு "வெல்லம் அல்லவா? மறையோனிடத்தில் ப னி புரி யு ம் தேவதாசன் விறகெடுக்க வனத்திற்குச் சென்றபோது அவன் அரவு தீண்டி இறந்த செய்தியை உடன் சென்ற சிறார்கள் வந்து சந்திர மதிக்குக் கூறல், மறையோனிடம் விடைபெற்றுக் கானகம் சென்று காதல் மகனைச் சென்று காண்டல் போன்ற செய்தி களை எல்லாம் கதையாகச் சொல்லி நெஞ்சை நெகிழ வைப் பார். மகனைக் கண்டு இரங்கி ஏங்கிக் கதறும் பாடல்களை அற்புதமாகக் கற்பிப்பார். பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து பசியால் அலைந்தும் உலவா அணியாய வெங்கண் அரவால் இறந்த அதிபாவம் என்கொல்? அறியேன் தனியே கிடந்து விடநோய் செறிந்து தரைமீது உருண்ட மகனே! இனியாரை நம்பி உயிர்வாழ்வம் என்றன் இறையோனும் யானும் அவமே.”* 34. மயா. காண். 21.